Author Topic: ~ கருப்பு கொண்டைகடலை சுண்டல் ~  (Read 409 times)

Offline MysteRy

கருப்பு கொண்டைகடலை சுண்டல்



தேவையானபொருட்கள்

கருப்பு கொண்டை கடலை – ஒரு கப்
துருவிய தேங்காய் – கால் கப்
சின்ன வெங்காயம் – முன்று
எண்ணை – இரண்டு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
சர்க்கரை – ஒரு சிட்டிகை
எண்ணை – இரண்டு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை

1. கொண்டை கடலையை இரவே ஊறபோடவும்.
2. காலையில் களைந்து தண்ணீரை வடித்து அதில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இரக்கவும்.
3.வெந்ததும் அதை வடித்து வைக்கவும்.
4. ஒரு வாயகன்ற வானலியில் எண்னி காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் கிள்ளி போட்டு ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து கிளறி கடைசியாக கருவேப்பிலையையும் சேர்த்து தாளிக்கவும்.
5. அதில் வடித்து வைத்துள்ள கடலையை சேர்த்து தேவைக்கு உப்பு, சர்க்கரை,தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கிளறி இரக்கவும். 6. கொத்துமல்லி தழை தூவி சாப்பிடவும்.