விண்ணும் மண்ணும்
காதலிப்பதனால் தான்
வானம் மழையைப் பொழிகிறது
நீரும் நெருப்பும்
காதலிப்பதனால் தான்
நெருப்பை நீர் அணைக்கிறது
காற்றும் கடலும்
காதலிப்பதனால் தான்
கடல் அலைகள் தோன்றுகின்றன
முள்ளும் மலரும்
காதலிப்பதனால் தான்
முள்ளோடு ரோஜா மலர்கிறது
நீயும் நானும்
காதலிப்பதனால் தான்
கவிதைகள் பிறக்கின்றன