நான் உன்மீது கொண்ட காதலை
எங்காவது எழுதி வைக்கவேண்டும்
கடற்கரையில் எழுதி வைத்தால்
அலைகள் வந்து அழிந்துவிடக் கூடும்
வானத்தில் எழுதி வைத்தால்
மழை வந்து அழிந்திடக் கூடும்
நிலவில் எழுதி வைத்தால்
தேய்பிறையில் தேய்ந்திடக் கூடும்
வானவில்லில் எழுதி வைத்தால்
வர்ணங்களில் வார்த்தைகள் தொலையக் கூடும்
கல்லில் எழுதி வைத்தால்
காலப்போக்கில் அது கரைந்திடக் கூடும்
ஆதலால்
தமிழ் சொற்கொண்டு கவிதையாக எழுதி வைக்கிறேன்
என் காதல் காலத்தையும் வென்று வாழும்