என் இதய சூரியன்
என்றோ அஸ்தமித்து விட்டது
என்றாலும்
என்னுள் உறங்கிக் கிடக்கும்
அவள் நினைவுகள்
உதய சூரியனே
உன்னை கண்டதும்
அவ்வப்போது துயில் எழும்
உதய சூரியனே
நீ
உலகை கழுவித் துடைத்து விட்டாய்
அவள் முகம் போலவே
அழகாய்
ஆனால்
மாலைச் சூரியனாக
மயங்கிக் கிடக்கிறது
அவள் மனம் மட்டும்
உயிர்களை
துயில் எழுப்பிய நீ
அவள் இதயத்தை மட்டும்
திரை போட்டு
இன்னும் ஏன் இருட்டாகவே வைத்திருக்கிறாய்
ஜனன சூரியனே
இருட்டில் தொலைந்து போன
அவள் இதயம்
வெளிசத்துக்கு வரும் என
காத்திருக்கிறேன் விடியலுக்காக