Author Topic: ~ சுண்டைக்காய் பொரியல் ~  (Read 375 times)

Offline MysteRy

~ சுண்டைக்காய் பொரியல் ~
« on: February 10, 2016, 08:19:18 PM »
சுண்டைக்காய் பொரியல்



தேவையானபொருட்கள்:

பச்சை சுண்டைக்காய் – 250 கிராம்
தேங்காய் துருவல் – ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சுண்டைக்காயை காம்பு ஆய்ந்து சிறிது நசுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த சுண்டைக்காய், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
குறிப்பு:
வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்… வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமாக தயாரிக்கலாம்