Author Topic: ~ கருப்பு உளுந்து மிளகு தோசை ~  (Read 324 times)

Offline MysteRy

கருப்பு உளுந்து மிளகு தோசை



தேவையான பொருட்கள் :-

கறுப்பு உளுந்து – 2 கப்
பச்சரிசி மாவு – அரை கப்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி

செய்முறை

உளுந்து ஐந்து மணி நேரம் ஊறவைத்து தோலுடன் நன்றாக அரைத்து கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு கலந்திடுங்கள்.
தூள் செய்து வைத்துள்ள அனைத்து பொருட்களும் உப்பும் கலந்து அரைமணி நேரம் வைத்திருங்கள். பின்பு தோசைகளாக வார்த்தெடுக்கலாம்.
காலை உணவிற்கு தயார் செய்வதாக இருந்தால் இரவே உளுந்தை ஊற வைத்து விட வேண்டும். இந்த தோசை சுவையாக இருக்கும்.
இதற்கு எள்ளு துவையல் சேர்த்து கொண்டால் அதிக சுவை தரும்.