Author Topic: ~ சிக்கன் பொடிமாஸ் ~  (Read 416 times)

Offline MysteRy

~ சிக்கன் பொடிமாஸ் ~
« on: February 07, 2016, 09:03:10 AM »
சிக்கன் பொடிமாஸ்



தேவையானவை :

1. சிக்கன் : 1 கிலோ
2. வெங்காயம் : 1 கிலோ
3. பூண்டு (பெரிது) : 10 பல்
4. காரமிளகாய் தூள் : 2 டேபிள்ஸ்பூன் (காரம் அதிகம் வேணும்னா கூட சேர்த்துகோங்க )
5. எண்ணெய் : 100 ml
6. மஞ்சள்தூள் : 1 டீஸ்பூன்
7. சீரகத்தூள் : 3 டீஸ்பூன்
8. கசகசா : 1 டேபிள்ஸ்பூன்
9. பொட்டுகடலை நுனிக்கியது தேவை என்றால் ..
10. உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை :

கோழியை நன்கு சுத்தபடுத்தி பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு vega வைக்கவும் …
நீர் இல்லாமல் சுருள ஆன உடன் ..சதை பகுதியை மட்டும் பிச்சி வைத்துக்கொள்ளவும்…
வெங்காயம் பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் ..
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் ,பூண்டு இரண்டையும் வதக்கவும் ..
பச்சை வாசனை போனதும் .. கோழியை கொட்டி கிளறவும் …
நீர் வற்றி வெங்காயமும் கோழியும் வறண்டு உத்ரி உத்ரியாக பிரிய வேண்டும் ..
அப்போது கசகசா சேர்த்து கிளறவும் … விரும்பியவர்கள் பொட்டுகடலை சேர்த்து கொள்ளலாம் …
காற்றுபுகாத பாட்டலில் போட்டு வைத்தால்..இது ஒரு மாதத்துக்கு கெடாது ….. கலவை சாதங்களுக்கு superரா இருக்கும்