வாழ்க்கையின் ஓரத்துக்கே தள்ளப்பட்டு
சாலையோரங்களில் நிறுத்தப்பட்டவர்கள்
நாங்கள் சாலையோரப் பூக்கள்
தயவு செய்து மிதிக்காமல் போங்கள்
கூவத்தில் தான் எங்கள் குளியல்
குடிநீரும் அதுவே
குழாய்கள் தான் எங்கள் படுக்கையறை
குடித்தனமும் அங்கேதான்
சாலைகளும் சீராக்கப்படுகின்றன
இந்த சாலையோரப் பூக்கள் மட்டும்
சீண்டுவார் இன்றி
இந்தப் பூக்களை எந்த அரசாங்கமும்
கண்டு கொள்ளுவதே இல்லை
குருவிக்கும் கூடுண்டு
மழை வந்தால் ஒதுங்கிக் கொள்ள
எங்களுக்கு ஏது வீடு
எங்ள் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு இல்லை
யாரும் பரிசீலனை பண்ணுவதும் இல்லை
சீர்கேடுகளின் கொலுபொம்மைகள் நாங்கள்
எங்களை மதிக்காவிட்டாலும் பரவில்லை
மிதிக்காமல் போங்கள்