நினைவுகளின் சங்கமம்..
ஒரு நாளும் எண்ணியதில்லை
அந்தக் கள்வனுக்காக மீண்டும்
ஒரு முறை இன்று என் கரங்கள்
இக்கவிதையைக் கிறுக்குமென்று
கண்ணோடு கண் பார்த்ததில்லை
கையோடு கை கோர்தத்தில்லை
முகம் பார்த்துப் பேசியதில்லை
ஆனாலும் தினம் நினைக்க தவறியதில்லை
முதன் முறை அக்கள்வனை கண்ட நொடி
இன்றும் சற்றும் மறக்கவில்லை எனக்கு
என் கற்பனை நாயகன் உயிர்பெற்றெழுந்து
என் முன்னே நிற்பதை உணர்ந்தவளாய் நான்
அதோ ஏனோ மாயம் அதே உணர்வு
என் கள்வனுகுள்ளும் உதயமானது
அந்த நொடி எங்களுகிடையே வார்த்தைகள் விரதமிருக்க
கண்கள் மட்டும் மொழி இன்றி மௌனமாய் பேசிகொண்டது
இந்த உணர்வுக்கு பெயர் ஏதோ தெரியாது
ஆனால் இது எங்களுக்கு புதிதான ஒன்று
நாட்கள் எங்களையே எங்களுக்கு அறிமுகம் செய்தது
எங்கள் சிந்தனைகள் ஒன்றினைந்தவாறே இருந்தன
எது எப்படியாகினும் காலம் நடத்திய திருவிளையாடலால்
இன்று நாங்கள் எங்கள் உறவுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு
வாழ்க்கை பாதையில் முன்னோக்கி பயணிக்கின்றோம்
உணர்வுகளை அடி மனதிலேயே புதைத்து விட்டு
கடமையும் பாசமும் பெரிதென எண்ணி
இரு மனமும் ஒன்றிணைந்து ஒருதலையாய்
அன்று துளிர் விட்ட அந்த உணர்வுக்கு தீயிட்டு
இன்றும் நட்பெனும் செடிக்கு நீரிட்டு கொண்டிருகின்றோம்
இது தோல்வி, வலி என ஒடுங்கி விடாமல்
இதுவும் கடந்து போகும் என அறிந்து புரிந்தவளாய்
என் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கிய இந்நினைவுகளுடன்
சிகரத்தை நோக்கி வெற்றி பயணத்தை தொடங்கியவலாக நான் ...
என்றென்றும் நினைவுகளை சுமந்தபடி
~ மைனா தமிழ் பிரியை ~