Author Topic: ~ பஞ்சாப் கோதுமை அல்வா ~  (Read 357 times)

Online MysteRy

~ பஞ்சாப் கோதுமை அல்வா ~
« on: February 01, 2016, 09:25:47 PM »
பஞ்சாப் கோதுமை அல்வா



தேவையானவை:

பஞ்சாப் கோதுமை – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 150 கிராம்
முந்திரி – 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 50 கிராம்.

செய்முறை

பஞ்சாப் கோதுமையை 4 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். ஊறிய கோதுமையை ரவை போல அரைத்துக்கொள்ளவும் (அரைத்த விழுது இட்லி மாவு பதத்தில் இருப்பது அவசியம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த கோதுமை விழுது சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்த பிறகு சர்க்கரை, 100 கிராம் நெய் சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வந்த பின் ஏலக்காய்த்தூள், முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.