வாடைக் காற்றின் வீச்சினிலே
பேடைதனை தேடித் திரிந்து
ஓடிக் களித்த கிளியினை
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்
மோகனக் குயிலது மோகிக்கூவையிலே
பந்திக்கும் பொருட்டாய் பந்தகியினைத்
தான் தேடும் பந்தியினைக்
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்
தெறித்திடும் தீங்குழ லோசையது
தெவிட்டாத தெள்ள முதாய்
கருத்தினைக் கவர்கையிலே கலாவமிரு
கூடிக் களிப்ப தனைக்
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்
மாரிப் பொழுதினிலே மாலைக்கதிரினிலே
சோலைக் குயிலதுவும் சோடியினை
நாடிக் குலவிடும் முருகினை
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்
காணுமிடமெங்கும் கவின்காட்சி வழியுதடி,
காதற்பெருக்கெடுத்து முகங்காண விழையுதடி,
ஆழிப்பெருக்கெடுப்பாய் இன்று ஆசைபெருகுதடி,
சோலை மயிலழகே உனை காண விருப்பமடி..