Author Topic: ~ ஹனி சிக்கன் ~  (Read 392 times)

Offline MysteRy

~ ஹனி சிக்கன் ~
« on: January 30, 2016, 06:00:09 PM »
ஹனி சிக்கன்



தேவையானவை:

எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி – 1/2 கிலோ
மாவிற்கு…
வெண்ணை – 4 ஸ்பூன்
சோளமாவு கரைசல் – 1/2 கப்
சமையல் சோடா – சிறிதளவு
முட்டை – 1
ஒரு முட்டையிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளை கரு
சாஸ் செய்ய தேவையானவை
1 1/2 ஸ்பூன் – எண்ணெய், நறுக்கிய இஞ்சி – 2 ஸ்பூன், நறுக்கிய பூண்டு – 3 ஸ்பூன், தேன் – 3 ஸ்பூன், வினிகர் – 1 ஸ்பூன், தண்ணீர் – 1/2 கப்

செய்முறை

மாவு செய்வதற்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 30 நிமிடங்கள் கழித்து அதனோடு சிக்கன் சேர்த்து பொரித்தெடுக்கவும்.
வானலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் பூண்டினை வதக்கி அதனோடு உப்பு, தேன், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து அதனோடு சோள மாவு கரைசலை சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வைத்து இறக்கி, இந்த கலவையை பொறித்து வைத்த சிக்கனுடன் சேர்த்து பரிமாறவும்.