Author Topic: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்  (Read 754 times)

Offline SweeTie

கார் முகிலில் மறைந்துநின்று
கண் குளிரப் பார்த்தேன் 
உன் திருட்டுபார்வையே
காட்டிக் கொடுத்துவிடும்
தென்றல் என்ற போர்வைக்குள்
திருடன் நீ நின்றதையும்
மழைத்துளிக்குள்   மறைந்து
மகரந்தத்தில் விழுந்ததையும்

என் கால்  கொலுசின் கொஞ்சல் 
உன்  காதில்  கேட்கவேண்டாமென
களட்டி  வைத்து வந்துவிட்டேன்
நீ  அறியமாட்டாய்  அதை
உன் நினைவுகளை மட்டும்
என் துப்பட்டாவில் முடிந்து
அலுக்காமல் குலுக்காமல்
வழி நெடுக சுமந்துவந்தேன்

கண்சிமிட்டும்  தாரகைகள்
ஆயிரம்  மின் குழல்  கொண்ட
சூரியா மின் குமிழ்   போல்
சூழவே  இருக்கின்றேன் 
குளிர் நிலவை விட்டு
இறங்கி வர மனசில்லை
என்  கண்மடலை  அனுப்புகிறேன்
அதில் நீ ஏறி  வந்துவிடு

« Last Edit: January 12, 2016, 11:00:07 PM by SweeTie »

Offline JoKe GuY

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 112
  • Karma: +0/-0
  • Gender: Male
  • The best of friends must part.
Re: காதல் திருடன்
« Reply #1 on: January 12, 2016, 09:57:31 PM »
காதல் கவிதைகள் மூலம் அனைவரின் மனதையும் திருடி விட்டீர்கள் ஸ்வீடி வாழ்த்துக்கள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
கண் மடலை அனுப்பிவிட்டால்
அந்நேரம்., உன்  கண்ணை யார் காப்பார்?

கண்ணோடு நீ வந்தால் .,,
உன்னோடு நான் வாறேன்!
« Last Edit: January 12, 2016, 11:15:36 PM by பொய்கை »

Offline vengad

Really  very Nice Sweetie @ Jo   Superb
« Last Edit: January 14, 2016, 12:33:13 AM by vengad »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
jo semma nice kavithai...kanmadal la yeri vara soldringale athenna boat ah:Dkeke

AnonYmous

  • Guest
ada ada ada sweetie, kavithai ah padikum bothe kadhal ponguthu, adutha love guru neenga thaan

Offline CybeR

Jii SoopEr Jii Sooper Epdi Ji Ipdi neenga...Taaru maru Ji

Offline SweeTie