Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ மெமரி பத்தாது மக்களே! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மெமரி பத்தாது மக்களே! ~ (Read 1026 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221564
Total likes: 27257
Total likes: 27257
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மெமரி பத்தாது மக்களே! ~
«
on:
January 09, 2016, 08:26:41 PM »
மெமரி பத்தாது மக்களே!
கார்க்கிபவாஉங்கள் மொபைலின் மெமரி எவ்வளவு? `16 ஜிபி ப்ரோ' என கெத்து காட்டுபவர்கள், அடுத்த மொபைல் வாங்கும் முன்னர் கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள். காரணம், 16 ஜிபி எல்லாம் இனி பத்தாது ட்யூட்ஸ்.
உலகம், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட்போனுக்குள் மறைந்துவருகிறது. இன்னும் விரைவாக, எளிதாக, ஜாலியாக நம் அன்றாடத் தேவைகளை மொபைல் வழியே முடித்துத் தர, எல்லா நாட்டு ஆட்களும் ஓவர்டைம் வேலைபார்க்கிறார்கள். ஒரு ஐடியா பிடித்து இந்த ஆண்டு தெறிக்கவிட்டால், அடுத்த ஆண்டே ‘அதுக்கும் மேல' என அதிரடி அப்டேட்களுடன் வருகிறார்கள். 2015-ம் ஆண்டில் மெள்ள தலையெடுத் திருக்கும் `ஆப்’களுக்கு, 2016-ம் ஆண்டில் ஹிட் அடிக்கும் யோகம் பளிச் பளிச். அதைவிட சோஷியல் மீடியாவில் நடைபெறப்போகும் மாற்றங்கள்தான் அதிரடி கவனத்தை ஈர்க்கின்றன.
இன்ஸ்டன்ட் அப்டேட்ஸ்!
ஃபேஸ்புக்கின் ‘இன்ஸ்டன்ட் ஆர்ட்டிக்கிள்ஸ்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செய்தி நிறுவனங்கள், தங்களது கன்டென்ட்டை இனி ஃபேஸ்புக் மூலமே வாசகர்களிடம் கொண்டு சேர்க்கலாம். தனி பிரவுஸரில் பார்க்க ஆகும் நேரத்தைவிட இங்கே குறைவாகவே ஆகும். துல்லியமான படங்கள், எழுதியவரின் `வாய்ஸ் நோட்’, வீடியோ, நடுநடுவே விளம்பரங்கள் என, முழுப் பத்திரிகையையும் ஃபேஸ்புக்கின் உள்ளேயே புதைக்கப்போகிறார்கள். ஏற்கெனவே ‘கார்டியன்’, `வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பிரபல செய்தி நிறுவனங்கள் இதற்கு ‘ஓ.கே’ சொல்லிவிட்டன.
ஒன் க்ளிக் ஷாப்பிங்!
படங்கள் பார்ப்பது, வாசிப்பது, பதில் அளிப்பது என எல்லாமே ஒரே இடத்தில் செய்ய முடியும்போது ஷாப்பிங் செய்ய மட்டும் தனியே ஒரு ஆப் வேண்டுமா? இனி `ஒன் க்ளிக் ஷாப்பிங்’ தான். நீங்கள் ட்விட்டரில் அலைபாயும்போது ஒரு விளம்பர ட்வீட் வருகிறது. அதை வாங்க நினைத்து க்ளிக் செய்தால், தனியாக இன்னொரு ஆப் திறக்காது. ட்விட்டரில் இருந்தே ஒன் க்ளிக் பட்டன் மூலம் வாங்க முடியும். இந்த பட்டனை எந்த சோஷியல் மீடியாவிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்!
பெரிஸ்கோப் (Periscope)
இது ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப். இதன் நிறுவனர்கள் இஸ்தான்புல் நகரத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு இருக்கும் டாக்சிம் சதுக்கம் தாக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிய ட்விட்டரை எட்டிப் பார்த்தவருக்கு எல்லாமே எழுத்துக்கள் மூலமான தகவல்களாகவே கிடைத்தன. நடக்கும் விஷயங்களை ‘லைவாக’ப் பார்க்க எந்த வசதியும் அப்போது இல்லை என மூளைக்குள் ஃப்ளாஷ் அடித்திருக்கிறது. நாடு திரும்பியதும் உடனே ஒரு `வீடியோ ஆப்' உருவாக்க முன்வந்தார். ஆப் தயாரான ஒரே வருடத்தில் ட்விட்டர், பெரிஸ்கோப்பை பல மில்லியன் டாலர் கொட்டி வாங்கிக்கொண்டது. ட்விட்டருக்கு ஒரு வீடியோ பிளாட்ஃபார்ம் வேண்டும் என்பதாலும், பெரிஸ்கோப் தனக்கே ஒரு எதிரியாக வளரக்கூடும் என்பதாலும்தான் பெரிஸ்கோப்பை உடனடியாக வாங்கியது ட்விட்டர்.
ரிஸ்கோப்பில் குட்மார்னிங்கில் தொடங்கி டின்னர் மெனு வரை எல்லாவற்றையும் வீடியோ மூலமே ஷேர் செய்யலாம். பெங்களூர் டிராஃபிக் போலீஸ் ஏற்கெனவே பெரிஸ்கோப்புக்கு ‘ரெட் கார்பெட்’ விரித்திருக்கிறது. பெங்களூரு நகரில் யாராவது டிராஃபிக் ரூல்ஸை மீறினால், அதை மொபைலில் இருந்தே வீடியோ எடுத்து, புகார் தெரிவிக்க வழி செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்துவது பெரிஸ்கோப் ஆப்-பைதான்.
தொடங்கிய சில மாதங்களிலேயே ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பெரிஸ்கோப்பை டௌன்லோடு செய்தார்கள்.
ஸ்னாப்சாட் (Snapchat)
`லிவ் தி மொமன்ட்' என்பதுதான் இன்றைய இளசுகளின் வாழ்க்கை லட்சியம். நீங்கள் வாழும் நொடியைப் பதிவுசெய்ய, அட்டகாசமான ஒரு வாய்ப்பைத் தருகிறது ஸ்னாப்சாட் மொபைல் அப்ளிக்கேஷன். பார்ட்டிக்கோ, நிகழ்ச்சிக்கோ சென்றால், அங்கே நடந்த கலாட்டாக்களை அடுத்த நாள் வந்து ஒரு கதையாகச் சொல்வோம் இல்லையா? `சம்பவம் நடக்கும்போதே இன்ஸ்டன்ட்டாகச் சொல்லலாம்’ என்கிறது ஸ்னாப்சாட். அங்கே நடக்கும் கலாட்டாக்களை உடனுக்குடன் படம், வீடியோக்களாகச் சேர்த்து அதன் மேல் குறிப்புகள் எழுதி ஷேர் செய்யலாம். நீங்கள் அனுப்பும் படங்கள், வீடியோக்கள் நீங்கள் சொல்லும் நேரம் வரை மட்டுமே சர்வரில் இருக்கும். அதன் பின்னர் தாமாக டெலிட் ஆகிவிடும். மற்ற ஆப்களுக்கும் ஸ்னாப் சாட்டுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இது.
கோலிவுட் பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மல்லுக்கட்ட `ஹாய் ட்யூட்... கம் டு ஸ்னாப்சாட்’ என எல்லோரையும் இழுத்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. `இந்தப் புள்ள பல்லு விளக்கினாக்கூட ஸ்னாப்சாட்ல போடுதுப்பா’ என ஆர்யாவும் ரசிகர்களை வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். காரணம், நம் ஸ்னாப்சாட்களை யார் யார் பார்க்கலாம் என நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும். ஹன்சிகா பல் தேய்ப்பது ஆர்யாவுக்கு மட்டுமே தெரியலாம்!
10 கோடிக்கும் மேற்பட்ட மொபைல்களில் ஸ்னாப்சாட் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வருடம் அது 30 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
ரெடிட் (Reddit)
அள்ள அள்ளக் குறையாத அன்லிமிட்டெட் டேட்டா கிடங்குதான் ரெடிட்.காம். ரிஜிஸ்டர் செய்த யூஸர்கள், தங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைப்பில் ஒரு `சப் ரெடிட்’-ஐ தொடங்கலாம். அதன் சுவாரஸ்யம், நம்பகத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் படிப்பவர்கள் அதற்கு வாக்களிக்கலாம். அந்த வாக்குகள் அந்த `சப் ரெடிட்’-ஐ வெப்சைட்டின் முதல் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ இடம்பிடிக்க உதவும். நல்ல விஷயம் என்றால், முதல் பக்கத்துக்கு வந்து நிறையப் பேரின் லைக்ஸ் பெறும்.
தனிநபர் விஷயங்களுக்கு அதிக இடம் தராமல், சுவாரஸ்ய கன்டென்ட்டை நம்பி இயங்குவதால் ரெடிட்டுக்கு அட்டகாச வரவேற்பு கிடைத்திருக்கிறது. நமக்குப் பிடித்த தலைப்புகளை மட்டும் சப்ஸ்க்ரைப் செய்துகொண்டால், அதில் புதுப் பதிவுகள் வரும்போது நம் மெயிலுக்கே `சார்... போஸ்ட்’ என வந்துவிடும். கூடவே, பிடித்த எழுத்தாளர்களை ஃபாலோ செய்யவும் முடியும். எல்லாமே எழுத்தாக இருப்பது இல்லை. படங்களைத் தொகுத்து ஸ்லைட்ஷோ மூலமாகவும் படைப்புகளைக் கொடுக்கலாம். எதைப் பற்றி தேடினாலும் சரியான தகவலைக் கொடுக்கும் ‘குட்டி கூகுளாக’ மெருகேறிவருகிறது ரெடிட்.காம்.
ஒவ்வொரு மாதமும் 20 கோடிப் பேர் ரெடிட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். உலகின் டாப் வெப்சைட் அலெக்ஸா பட்டியலில் 31-வது இடத்தில் இருக்கிறது ரெடிட். கொஞ்சம் கொஞ்சமாக உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் ரெடிட், 2016-ம் ஆண்டில் ஒரு எங்கேஜிங் சோஷியல் மீடியாவாகக் கலக்கும்!
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ மெமரி பத்தாது மக்களே! ~