Author Topic: ~ உருளைக்கிழங்கு போண்டா ~  (Read 352 times)

Online MysteRy

உருளைக்கிழங்கு போண்டா



தேவையான பொருட்கள்:

அரிசி மாவு 1\3 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி – 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 2 சிட்டிகை

உள்ளே வைக்கும் பூரணம்:

வேகவைத்த உருளைக்கிழங்கு -1/2கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 3 ஸ்பூன்
எலமிச்சம் பழம் – 1

மேல் மாவு தயாரிக்க

சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் மாவைத் தயாரிக்கவும்.

செய்முறை:

வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை எடுத்து விட்டு சூடாக இருக்கும்போதே மசித்துக் கொள்ளவும்.
மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் உப்பு சேர்த்துக் கலந்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
கொத்தமல்லியையும் சேர்த்துப் பிசைந்து உருண்டைகள் செய்யவும். கடலை மாவு கலவை கலந்து உருண்டைகளை அதில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.