Author Topic: ~ அவரை வடை ~  (Read 366 times)

Offline MysteRy

~ அவரை வடை ~
« on: January 06, 2016, 08:10:00 PM »
அவரை வடை



என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு – 100 கிராம்,
அவரைக்காய் – 100 கிராம்,
வெங்காயம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிது,
சோம்பு – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை  ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலையைபொடியாக நறுக்கி, மாவுடன் கலக்கவும்.  கடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த கலவையை வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.