Author Topic: ~ `லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள்! ~  (Read 491 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
`லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள்!

`லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள்!
பாரம்பர்ய சமையல்பருவ மழை, பயங்கர மழையாக மாறி,  மாநிலத்தையே நடுநடுங்க செய்துவிட்டது. மழையின்  தொடர்விளைவாக... வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், டிரெயின், பஸ் எங்கெங்கும் `லொக்... லொக்’, `ஹச்... ஹச்’ சத்தங்கள் கேட்பதுடன், ஜலதோஷத்தோடு ஜுரம், வயிற்றுக் கடுப்பு போன்றவையும் கைகோத்து இம்சையில் ஆழ்த்துகின்றன. இத்தனை சிரமங்களுக்கு இடையே நமக்கான ஆறுதல்... இவற்றிலிருந்து வருமுன் காக்கவும், வந்த பிறகு சரிசெய்யவும்... உணவையே மருந்தாக்கி, நம் முன்னோர்கள்  நமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதமான உணவு வகைகள்தான். இத்தகைய உணவுகளை துவையல், கஞ்சி, ரசம், குழம்பு, பச்சடி என நம் அன்றாட உணவு வகைகளாகவே அக்கறையுடன் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.
கரண்டி எடுங்க... கஷ்டத்தை விரட்டுங்க!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வரகரிசி கஞ்சி

தேவையானவை:

வரகரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வரகரிசி, பாசிப்பருப்பை நீர் விட்டு அலசி தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிட்டு இறக்கி வைக்கவும். இதனுடன் தயிர், மிளகுத்தூள் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சத்துக்கள் மிக்க இந்தக் கஞ்சி எளிதில் ஜீரணமாகக் கூடியது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கஷாயம்

தேவையானவை:

 மிளகு - 10, இஞ்சி (அலசி, தோல் சீவியது) - சிறிதளவு, பனங்கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், சித்தரத்தை - சிறிதளவு, துளசி (அலசி ஆய்ந்தது) - 2 கைப்பிடி அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அடிகனமான பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும், ஒரு டம்ளர் நீராக சுண்ட வேண்டும், வடிகட்டி இளம் சூடாக பருகலாம்.

இந்தக் கஷாயம் மழை, குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தூதுவேளை துவையல்

தேவையானவை:

 தூதுவேளை - ஒரு கப், புதினா- அரை கப், முழு உளுத்தம்பருப்பு - கால் கப், சின்ன வெங்காயம் 8, காய்ந்த மிளகாய் - 4, புளி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உரித்த சின்ன வெங்காயம், முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி சேர்த்து வதக்கி, பின்னர்  தூதுவேளை, புதினா சேர்த்து மேலும் வதக்கி எடுத்து ஆறவிடவும். இதனுடன் உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்த துவையலில் சேர்க்கவும்.

இருமல், இரைப்பு, சளி தொந்தர வுக்கு தூதுவேளை சிறந்த நிவாரணி.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹெர்பல் டீ

தேவையானவை:

 கிராம்பு - 6, மிளகு - 5, தேன் - தேவையான அளவு, டீத்தூள் - ஒரு டீஸ்பூன், ஓமவல்லி இலை - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், துளசி - ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை:

கிராம்பு, மிளகை பொடி செய்துகொள்ளவும். ஒரு கப் நீரில் இந்த பொடியைச் சேர்த்து, இதனுடன் டீத்தூள், ஓமவல்லி இலை, சீரகம், துளசி சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி, தேன் கலந்து பருகவும்.

இந்த ஹெர்பல் டீ உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிளகு ரசம்

தேவையானவை:

தக்காளி - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

புளியை நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து வறுத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு... நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, வறுத்து அரைத்த விழுதை சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். தாளிக்கும் பொருட்களை சிறிதளவு எண்ணெயில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

மிளகு, ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெற்றிலை - சீரக சாதம்

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப், வெற்றிலை - 15, சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - கால் கப், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சீரகம், மிளகு, ஓமத்தை 10 வெற்றிலையுடன் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் பூண்டுப் பல், வேர்க்கடலை, எள் சேர்த்துக் கிளறி, அரைத்து வைத்த வெற்றிலைக் கலவையை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். இந்த விழுதை ஆறவைத்த சாதத்தில் போட்டுக் கிளறவும், மீதம் உள்ள 5 வெற்றிலையை சிறியதாக நறுக்கி, கிளறிய சாதத்தில் போட்டு, மீண்டும் கிளறி மூடவும். பரிமாறும்போது திறந்தால், வெற்றிலை மணத்துடன், சூப்பர் சுவையுடன் இருக்கும்.

வெற்றிலை நோய் எதிர்ப்பு சக்திமிக்கது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இஞ்சி - பூண்டு குழம்பு

தேவையானவை:

இஞ்சி – ஒரு அங்குல துண்டு, பூண்டுப் பல் - 15, சின்ன வெங்காயம் - 8, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நல்லெண்ணெயில் வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் தாளித்து... தோல் உரித்த சின்ன வெங்காயம், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டுப் பல் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து மேலும் வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்.

இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக் கும். ஜலதோஷம், தலைவலி நீங்க உதவும். பூண்டு வாயுத்தொல்லை யிலிருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.