Author Topic: என் பக்கத்தில் இருந்தால்.......  (Read 387 times)

Offline SweeTie

என் பூவிழியோரம்
சிந்திடும் கண்ணீர்
உன் கண்களில் படவில்லையா ?
தூசிகள் விழுந்து என்
கண்கள் கலங்கிடும் என்று
உன் நினைவினில் வரவில்லையா?
பொன் எழில் தேகம்
மாலையில் வாடிடும்போது
நினைவுகள் எனை வாட்டும்
தேன் துளிகளாய்  உன்
பேச்சு காதினில் ஒலித்திடும்
வேளைகள்   சுகமாகும்
நீ வரும்வேளை எப்போது
என ஏங்கிடும் கணங்களில்
மதி மயக்கம் உண்டாகும்
உயிர் பிரிந்திடும்வேளை என்
பக்கத்தில் இருந்தால்
அதுவே பேரின்பமாகும் !!!!! 

Offline JoKe GuY

நீங்கள் எங்கள் பக்கம் இருந்தால் எங்களுக்கு கவிதை மழைதான் உறுதி.
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்