Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாட்டு மருந்துக் கடை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நாட்டு மருந்துக் கடை ~ (Read 391 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226796
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நாட்டு மருந்துக் கடை ~
«
on:
November 22, 2015, 05:21:01 PM »
நாட்டு மருந்துக் கடை
ஊரெங்கும் மழைக்காலம். ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என நாம் கொண்டாடினாலும், மழைக்காலக் கரிசனங்கள் கட்டாயம் தேவை. அதுவும், லேசாக ஜுரம் வந்தாலே ‘டெங்குவோ!’ என அள்ளிப் பதறி, ரத்தம் டெஸ்ட் செய்ய ஓடும் தற்போதைய சூழலில் மழைக்கால மெனக்கெடல், காலத்தின் கட்டாயம். இந்தத் தேடலில், ‘நாட்டு மருந்துக்கடை’யின் முதல் தேர்வு - தூதுவளை.
வல்லாரையை, ‘சீந்திலை அமிர்தவல்லி’ என்றும், ‘ஞானவல்லி’ என்றும் செல்லமாகச் சொன்ன சித்தமருத்துவம், தூதுவளையை ‘சிங்கவல்லி’ என கர்ஜிக்கிறது. பாமரருக்கு, சாதாரண சளி, இருமலுக்கு மட்டுமே பரிச்சயமான தூதுவளை சித்த மருத்துவருக்கு அதையும் தாண்டி மருத்துவப் பயன்கள் பல தருவது என்பதால், ‘கொடிகளின் ராஜா’ என தூதுவளைக் கொடியைச் சொன்னார்கள். சிறு முட்கள் உள்ள இந்தக் கொடியை, மழைக்காலத்துச் சமையலில், ரசமாக வைத்துச் சாப்பிடுவது தமிழர் மரபு. அப்படிச் செய்கையில் கொடியின் முட்களை மட்டும் நீக்கிவிட்டு, கொஞ்சம் கொத்தமல்லி, சீரகம், புளி சேர்த்து ரசமாக்கிச் சாப்பிடுவர்.
‘தூதுவேளையையுணத் தொக்கினிற் றொக்கியவேதையா நோயெலா மெய்யைவிட் டகலுமே’ என்கிறது தேரன் குணவாகடம் எனும் சித்த நூல்.இதன் பொருள், தூதுவளையை, கற்பமுறையாகவேனும், கறியாகவேனும் உட்கொண்டுவர, உடலில் கபத்தினால் ஏற்பட்ட நோய்கள் எல்லாமும் நீங்கும்.
தூதுவளையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவப் பயன் தரும். இலையினால் உண்டிக்குச் சுவையும் கிடைத்து, நெஞ்சின் சளியெல்லாம் கரையும். பூவும் மொத்த கீரையுமே ஆண்மையைப் பெருக்கும்; காய், வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களையும் நீக்கும். வேரும் கொடியும் இருமல், இரைப்பு முதலிய ஐயப்பிணிகளைப் போக்கும்.
காயை வற்றலிட்டுப் பாகம் செய்து உண்டுவர, ஐய நோய், அழல் நோய், வளி நோய் முதலியன அணுகாது. குடல்வாதம் நீங்கும்.
குழந்தைகளுக்கு காதில் சீழ் வரும் நோய்க்கு, தூதுவளை இலையைப் பிழிந்து, காதில் துளியாக விட, நோய் நீங்கும். இலையைத் துவையல், குழம்பு முதலியன செய்து உண்ண, சளி வெளியேற மறுத்து, நெஞ்சை அடைத்து வரும் கோழைக்கட்டு நீங்கி இருமலை ஓடிப்போகச் செய்யும். இதனை நெய் சேர்த்துக் காய்ச்சி, ஐயநோய், இருமல் நோய்களுக்கு சித்த மருத்துவர் கொடுப்பார்.
தைராய்டு கட்டிகள்
இதன் இலையை கஷாயமாக்கி அருந்திவந்தால், தைராய்டு கட்டிகள் பாதிப்பு மறைந்து, தைராய்டு சீர்படும் எனச் சொல்லப்படும் கருத்துகள் ஆய்வுக்கு உரியவை.
தூதுவளை இலையைச் சேகரித்து, சுத்தம் செய்து, 15 முதல் 50 கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து, ரொட்டியாகத் தயாரித்து, காலை உணவாக, கப நோய்க்கும் தொண்டை நோய்க்கும் சாப்பிடச் சொல்கிறது சித்த மருத்துவம்.
‘20 கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து, வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டுவந்தால், நோய்த் தடுப்பாகவும், நினைவாற்றல் பெருகவும் செய்யும்’ என்கின்றன சில அனுபவக் குறிப்புகள். மேலும், வாயுப் பிரச்னையைப் போக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால், உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மைசக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.
தூதுவளையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். அதனால், தூதுவளைக் கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து, நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டுவர வேண்டும்.
மூலிகை என்றாலே, எங்கோ எளிதில் ஏற முடியாத மலையில் வளரும் என்ற தவறான நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், மிக எளிதாக வளரும் இந்தக் கீரையை வீட்டுத் தோட்டத்தில், மாடித்தோட்டத்தில்கூட வளர்க்க முடியும். தூதுவளை போன்ற அரிய குணம் உடைய மூலிகைகள் பல நம் நாட்டு மருந்துக்கூட்டத்தில் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தூதுவளை வெறும் கொடி மட்டும் அல்ல. அது, நம் ஆரோக்கியத்தின் தூதுவன்.
- தொடரும்
தூதுவளைக் குடிநீர்
தூதுவளை, இம்பூறல், ஆடாதொடை, சங்கன் வேர், சுக்கு, வீழி, திப்பிலி, பர்படாகம், வழுதுனை வேர், கண்டக்காலி ஆகியவற்றை, தலா 30 கிராம் எடுத்துச் சேர்த்து, ஆறு லிட்டர் நீர் விட்டு, அதை எட்டில் ஒரு பாகமாகக் குறுக்கி, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள, சளியுடன் கூடிய காய்ச்சல் போகும்.
இதில் உள்ள ஒவ்வொரு மூலிகையும், நவீன மருந்துவ ஆய்வுகளில் நுரையீரலைத் தாக்கும் கிருமிகளுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக்காகவும், கோழை அல்லது சளி நீக்கியாகவும் (Mucolytic), நுரையீரல் குழாய் சுருக்கம் நீக்கியாகவும் (Bronchodilation), எக்ஸ்பெக்டோரன்டாகவும் (Expectorant) செயல்படுகிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாட்டு மருந்துக் கடை ~