மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி…
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்…
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்…
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்
Next letter "ந"