Author Topic: ~ சுரைப் பணியாரம் தீபாவளி ரெசிபி ~  (Read 520 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227457
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுரைப் பணியாரம் தீபாவளி ரெசிபி



தேவையான பொருட்கள் :

பச்சரிசி – அரை கப் உளுந்து – அரை கப் உப்பு – ஒரு சிட்டிகை தேங்காய்ப்பால் – நான்கு கப் ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி சர்க்கரை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

பச்சரிசி உளுந்தை ஒரு மணிநேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து மைய அரைக்கவும். கொட்டாங்குச்சியின் கண் இருக்கும் இடத்தில் ஓட்டை போடவும். அரைத்த மாவை கொட்டாங்குச்சியில் போட்டு சூடான எண்ணெயில் அழுத்தினால் மணி மணியான பணியாரம் ரெடி! இதை பொன்னிறமாகப் பொரித்து வெந்நீரில் போட்டு தனியாக வைக்கவும். இதற்கிடையில் தேங்காய்ப் பாலில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கலக்கவும். இதில் பணியாரங்களைச் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைத்துப் பரிமாறவும்.