Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~  (Read 754 times)

Offline MysteRy

~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« on: October 11, 2015, 09:51:49 PM »
டிப்ஸ்... டிப்ஸ்...



பச்சை மிளகாய் 3, ஒரு துண்டு பெருங்காயம், அரை ஸ்பூன் கல் உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து, பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளோடு நன்றாகப் பிசிறி வைக்கவும். பின்னர் கடுகு தாளித்து உபயோகிக்கவும். இந்த ஊறுகாய் படுருசியாக இருக்கும்.

உலர்ந்த திராட்சைப் பழங்கள் 20 எடுத்து சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை ஸ்பூன் சோம்பையும் போட்டு கஷாயம் வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால்...மாதவிலக்கு காலத்தில் வயிறு, நெஞ்சு, விலா, முதுகுப்பக்கங்களில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் தயிருடன் அரை தக்காளிப் பழத்தை சேர்த்து நன்கு பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும்.

ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது,2 டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.

குருமா நீர்த்துவிட்டால், அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை போட்டுக் கொதிக்க விட்டால் கெட்டிப்பட்டுவிடும்; ருசியும் கூடும்; சத்தும் கிடைக்கும்.