மிக சரியாக அதுவும் மிக சரியான தினத்தில் இதை கூறி இருக்கிறீர்கள் தோழி MysteRy... மிக சரியான விவாதமும் கூட, 
இணையத்தில் ஒரு நண்பர் மிக அழகாக ஒரு கவிதை பதிவிட்டு இருந்தார் 
காய்விடுவதையும், 
பழம்விடுவதையும் 
விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் 
குழந்தைகள்! 
நாம் தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.  என்று எவ்வளவு உண்மையான வார்த்தைகள் 
எனக்குத் தெரிந்த வயதான தாத்தா 'கடவுளே என்னை அழைத்துக் கொள் ' என்று வேண்டுவார். எதுக்கு தாத்தா என்று கேட்டபோதுதான் தெரிந்தது ரெண்டு கைகள். கால்கள், ரெண்டு கண்களூம் நல்லாயிருக்கும்வரை நல்லபடியா இருந்து யார்க்கும் தொந்தரவு இல்லாமல் போய்ச் சேரலாம் என்றார். எத்தனை நிதர்சனமான உண்மை. பணம், சேமிப்பு மட்டுமே முதுமைக்கு தீர்வல்ல. அன்பான உறவுகள் இருந்தாலும்கூட முதுமை முடக்கிப் போடும் போது தனிமைச் சிறையில் உணர்வுகள் ஒடுக்கப்படும் அவலம்.
கையாலாகாத இந்த அவலம் முதுமையின் சாபக்கேடே.
முதியோரை வணங்குங்கள். 
வணங்காவிட்டாலும் பரவாயில்லை, 
அவமரியாதை செய்யாதீர்கள். 
நாம் நேசிக்கப்படவில்லை என்பதைக் காட்டிலும் புறக்கணிக்கப்படவில்லை என்பதில் திருப்திப் பட்டுக்கொள்ளலாம்!