உன்னுடைய கருவறையில்
எனக்கு வலி தெரியாமல் இருக்க,
உன்னுடைய வலியை பொறுத்துக்கொண்டு,
பத்து மாதங்கள் சுமந்து என்னை ஈன்ற
என் தாயெனும் தெய்வமே...
தூய்மையான உள்ளத்துடன்
இப்புண்ணிய பூமிக்கு என்னை அறிமுகம் செய்த
என் தாயெனும் கடவுளே...
எனக்கு பாலூட்டி, சோறுட்டி,
அரிவூட்டி , நற்பண்புகளை சொல்லி கொடுத்து,
தத்தி தத்தி நடை பயில கற்று தந்து,
இன்று நான் வளர் பிறையாக வளர்ந்து நிற்க,
ஏணியாக நின்று ஏற்றி வைத்த
என் தாயெனும் இறைவனே...
சொர்க்கம் என ஒன்று உண்டு
என அன்று தெரிந்து கொண்ட நான் …
அது என் தாயின் மடி தான் என
இன்று உணர்கிறேன் என்னுயிர் அன்னையே...
எத்தனை ஆயிரம் ஆயிரம் உறவுகள்
என் அருகில் இருந்தாலும்,
உன்னுடைய சுகவாசம் மட்டும் போதும் அம்மா
என் ஆயுள் உள்ள வரை ...
ஆண்டவன் கருணை படைப்பில்
மறு ஜென்மம் என்று உண்டென்றால்,
உனக்கே நான் மகளாக பிறக்க வரம் கொடு தாயே…..
பிரியமுடன் நந்தினி