Author Topic: ~ ‘‘இங்கிலீஷ் பேசறது பெரிய விஷயமில்லை. அதை சரியா பேசணும்!’’ ... ~  (Read 976 times)

Offline MysteRy

‘‘இங்கிலீஷ் பேசறது பெரிய விஷயமில்லை. அதை சரியா பேசணும்!’’ ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்!



‘‘இங்கிலீஷ் பேசறது பெரிய விஷயமில்லை. அதை சரியா பேசணும்!’’ என்ற கருத்தையே அடிக்கடி வலியுறுத்தும் அனந்த சாய்,
ஆங்கில கல்விப் பணியில் சீனியர் லெக்சரராக இருந்து ஓய்வு பெற்றவர்.
பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கே பயிற்சி தந்தவர்.
இவர் எழுதிய ஆங்கிலப் பாடங்கள் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பாடமாக இருக்கிறது. தமிழிலும் சரளமாக எழுதும் அனந்த சாய்,
‘‘அவள் வாசகிகளை ரொம்ப ஈஸியாக இங்கிலீஷ் பேச வெச்சிடறேன்’’ என்ற உறுதியோடுதான் பேனா பிடித்து களம் இறங்கியிருக்கிறார்.
குரு வணக்கத்தோடு தொடங்குவோம்!



‘‘கு ட் மார்னிங் மேம்!’’
தோட்டத்துச் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த உஷா மேம் தலை நிமிர்ந்து பார்த்தார். பக்கத்து காம்பவுண்ட் சுவர் அருகே வித்யா!
‘‘ஹாய் வித்யா... குட்மார்னிங்! காலேஜ் லைஃப் எப்படி இருக்கு?’’
வித்யா, பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவி. உஷா மேம் பணியாற்றும் கல்லூரியில்தான் படிக்கிறாள்.
‘‘எப்படியோ போகுது மேம்...’’
கேட்டதுமே உஷா மேம் முகம் சுருங்கி விட்டது. வித்யா அருகில் வந்து, ‘‘என்ன கஷ்டம் உனக்கு?’’ என்றார்.
‘‘எல்லா பாடமும் இங்கிலீஷ்லயே நடக்குது. என்னால பிக் அப் பண்ண முடியல. பொண்ணுங்ககூட ஈக்வலா இங்கிலீஷ்ல பேசவும் வரல!’’ - வித்யா கவலையோடு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மேம் வீட்டு மாடியில் குடியிருக்கிற கோமதி அங்கே வந்தாள்.
‘‘ஆன்ட்டி, வித்யா சொல்லிட்டிருந்ததை நானும் கேட்டேன். எனக்குக்கூட இந்த இங்கிலீஷ் தகராறு பண்ணுது. என் ஷிவானி குட்டி படிக்கிற ஸ்கூல் மிஸ்களோட இங்கிலீஷ்ல பேசணும்னு ஆசை!’’ என்று தானும் ஒரு அப்ளிகேஷன் போட்டாள்.
‘‘ஓகே. கவலையை விடுங்க. இனி உங்களை இங்கிலீஷ் பேச வைக்கறதுதான் என்னோட வேலையே!’’ என்ற உஷா மேம், ‘‘வசமா சிக்கிட்டீங்க. ஒரு வழி பண்ணிடறேன்’’ என்று சொல்லி சிரிக்க, திடீரென்று வித்யாவுக்கு ஒரு சந்தேகம்!



‘ ‘மேம்! நான் ஃபீஸ் கட்டி ஒரு வாரம் ஆச்சு. எப்ப ரிஸிப்ட் குடுப்பாங்க?’’ என்றாள்.
‘‘கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ராப்ளம். சீக்கிரமே கொடுத்துடுவாங்க!’’ என்ற உஷா மேம், ‘‘ஆமா, நீ என்ன சொன்னே? ரிஸிப்டா? அப்படி சொல்லக் கூடாது வித்யா. ‘ரிஸீட்’னுதான் சொல்லணும். அதாவது, receipt p ’-க்கு சவுண்ட் இல்லை. ஸைலன்ட்!’’ என்றார். தொடர்ந்து, ‘‘ரொம்ப பேருக்கு இதுதான் பிரச்னை. இங்கிலீஷ்ல பேசுவாங்க. ஆனா, உச்சரிப்புல தப்பு பண்ணி, கேலிக்கு ஆளாவாங்க. நீங்க இதுல உஷாரா இருக்கணும்’’ என்று மேம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கே ஓடி வந்தாள் கோமதியின் குட்டிப்பெண் ஷிவானி.
‘‘ஹாய், ஷிவானி! புதுசா என்ன ரைம் கத்துக்கிட்டே?’’ என்று அவள் தாடையைப் பிடித்து உஷா மேம் கொஞ்ச, குழந்தை சட்டென்று ‘ Johny Johny yes, papa... ” என்று ஆரம்பித்தது, அதற்கே உண்டான மழலையில்.
‘‘பாத்தியா, வித்யா! எவ்வளவு சரளமா சொல்லுது, ஷிவானி குட்டி! ஸ்கூல்ல நர்ஸரி ரைம்ஸ் சொல்றதே நாக்கு சரியா புரள்றதுக்குத்தான். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா ரைம்ஸ் சொல்லிப் பாருங்க!’’
வித்யா சிரிக்கவும், ‘‘என்ன சிரிக்கிறே! பெரியவங்ககூட சொல்லலாம். அப்புறம் tongue twisters தர்றேன். அதையும் ப்ராக்டீஸ் பண்ணுங்க.’’ என்றார் (உஷா மேம் கொடுத்த அந்த ஹோம் வொர்க், பெட்டியில்).
‘‘முதல் நாளே உங்களை பயமுறுத்தக் கூடாது. இருந்தாலும், தள்ளிப் போடாம பாடத்தை ஆரம்பிச்சுடறதுதான் பெட்டர்’’ என்ற உஷா மேம், ஓர் ஓரமாக நிழல் பார்த்து அமர, பக்கத்தில் அமர்ந்தனர் அவர்களும்.
‘‘மேம், முதல்ல இங்கிலீஷ்ல பேச்சை ஆரம்பிக்கறதுலயே எனக்கு தகராறு இருக்கு. அதுவே முதல் பாடமா இருக்கட்டுமே’’ என்று வித்யா சொல்லவும், உஷா மேம் ஆரம்பித்தார்...
‘‘இரண்டு பேர் சந்திக்கிறப்ப யார் முதல்ல பேசறதுங்கறதுல தயக்கம் இருக்கும். குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்காகப் பேசப் போறோம்னா அதுக்கான keywords வெச்சுக்கிட்டு பேசத் தொடங்கிடலாம். பொதுவா, பேசணும்னா எல்லாரையும் பாதிக்கிற தலைப்புகள் இருக்கு. வானிலை, புது சினிமா, டிராஃபிக், ஆபீஸ், குழந்தைகள்... இப்படி சொல்லிட்டே போகலாம். இப்ப மழையும் ஒரு டாபிக்தான். செம மழை பெய்திருக்கு இல்லியா? இதை வெச்சே, ‘ Very bad weather, isn’t it? ’னு ஆரம்பிச்சா, எதிர்ல இருக்கிறவர் பதில் சொல்லியே தீரணும்! அதேமாதிரி, தியேட்டர்ல சினிமா பார்க்கப் போயிருப்போம். நம்மை முறைச்சுக்கிட்டு ஒரு லேடி நிப்பா. நமக்கும் பொழுதுபோகணும். அவங்ககிட்ட, ‘ Have you seen this actor’s other films? ’னு நாம ஆரம்பிச்சா, அந்த லேடி நமக்கு ரொம்ப நாள் பழக்கம் மாதிரி பேச ஆரம்பிச்சுடுவா! இந்தக் கேள்விகளை அமைக்கறதுக்கு auxiliary verbs... அதாவது, துணை வினைச் சொற்கள் அவசியம்..’’ என்ற மேம், அந்த auxiliary verbs -ஐ வித்யாவிடமிருந்த நோட்டில் இப்படி எழுதினார்...
Auxiliary verbs
Be verb : am, is, was, are, were
Do verb : do, does, did
Perfect verb : have, has, had
Modal verb : shall, should, will, would, can, could, may, might
‘‘இந்த நாலு வரிசையும் ரொம்ப முக்கியம். கேள்வி எந்த வரிசை verb ல இருந்து வருதோ, அதே வரிசை verb ல பதில் சொல்றதுதான் மரபு. கோமு... இப்ப, ‘ Do you understand? ’னு நான் கேக்கறேன். நீ என்ன பதில் சொல்வே?’’
“Yes, I understand!” என்றாள் கோமதி.
‘‘அதை ‘Yes, I do ’ னு சொல்லு. இல்லேனா ‘ No, I don’t’ னு சொல்லு. இன்னொரு கேள்வி. Have you seen Majaa? ’’
கோமதி சிரித்தாள். ‘ ‘Yes, I have. ”
‘‘இப்படி ‘ Yes. I have ’னு பதில் சொல்றப்ப auxiliary verb க்கான சுருக்கமான வடிவத்தை சொல்லணும். அதாவது, ‘ Yes, I’ve ’ னு (யெஸ், ஐ’வ்) சொல்லணும்’’ என்ற மேம், ‘‘கோமு! நான் உட்கார்ந்தாகூட இனிமே நீ உட்காரமாட்டே! ஏன்னு எனக்குத் தெரியும்!’’ என்று கிண்டலடித்தாள்.



‘‘ஆமா, ஆன்ட்டி! டி.வி சீரியல் டைம் இப்ப!’’ என்று எழுந்தாள் கோமதி.
‘‘ரைட்! நம்ம அடுத்த க்ளாஸ்ல, நீ பாக்கற சீரியல் கதையை எனக்கு இங்கிலீஷ்லயே சொல்றே. அப்ப wh ஐ வெச்சு கேள்வி கேக்கறே. ஓகே-வா?’’
‘‘ஓகே. ஆன்ட்டி!’’