Author Topic: ~ ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்! ~  (Read 373 times)

Offline MysteRy





தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு.

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மிக்ஸியில் போடவும். இதனுடன், சிறிதளவு தேன் சேர்த்து, அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சியாகக் குடிக்க விரும்புகிறவர்கள், சிறிது ஐஸ் கட்டி சேர்த்து அரைக்கலாம்.

பலன்கள்:

திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அன்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவு உள்ளன. நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவு இருக்கின்றன. மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும். தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸ் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைப்படி, அளவாகப் பருக வேண்டும். குழந்தைகள், வளரும் இளம் பருவத்தினருக்கு மிகவும் நல்லது.