Author Topic: ~ முடக்குவாதம் போக்கும் முடக்கத்தான்!! ~  (Read 320 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றிப் படரும் கொடி வகையைச் சேர்ந்தது முடக்கத்தான் கீரை. முடக்கத்தான் கீரைக்கு முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்குற்றான், மோதிக்கொட்டன் என்ற பெயர்களும் உள்ளன.



கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் வந்தது. முடக்கத்தான் இலை, வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக்கொண்டவை.

முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.

முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும்.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டுவந்தால், வலி, வீக்கம்  குறைந்து,   நோய் குணமாகும்.



காதில் வலி, சீழ் வடிதல் இருந்தால், முடக்கத்தான் இலைச்சாற்றைக் காதில்விட, உடனடியாகச் சரியாகும்.

முடக்கத்தான் இலையைப் பொடி செய்து, அதனுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், சித்திர மூல வேர்ப்பட்டைப்பொடி, கரிய போளம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சூதக்கட்டு நீங்கும். முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால், உதிரப்போக்கை ஒழுங்குபடுத்தும்.

முடக்கத்தான் கீரையைத் தனியாகவோ அதன் வேருடன் சேர்த்தோ நீரில் கலந்து குடித்துவந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் நீங்கும்.

முடக்கத்தான் கீரையை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்