Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146693 times)

Offline LoLiTa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #330 on: October 03, 2016, 04:03:39 PM »
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.
 
விளக்கம்:

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கன்னம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.


__________   குறையினும் நோய்செய்யும்   ____________ ___________ ___________   மூன்று

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #331 on: October 04, 2016, 09:27:16 AM »
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


விளக்கம் :
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

யாதானும் .................... .................என்னொருவன்
சாந்துணையுங் ............ ...............
« Last Edit: October 04, 2016, 09:29:01 AM by ரித்திகா »


Offline Maran

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #332 on: October 05, 2016, 06:11:33 PM »



யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


பணக்காரனுக்கு  ஊரில் மட்டும்தான்  மதிப்பு. பதவியில் இருப்பவனுக்கு அவனது சொந்த நாட்டில் மட்டும்தான் மதிப்பு. கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒழுங்கா படிங்கடா னு சொல்லுகிறார் வள்ளுவர்.

இதைவிட எளிதா சொல்லனும்னா இருப்பவனுக்கு என்றும் தெரியாது இல்லாதவன் கஷ்டம். ஆனால், கற்றவனுக்கு தெரியும் அதன் அருமைபெருமை படிக்கவைப்போம் அனைவரையும்...



இன்றைய நிலையில் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைப்  பாடத்தை கற்றவனுக்கு வகுப்பு பாடம் பெரிதல்ல...!!


eppadiyum copy paste thaan panna poringa...  :) kamathu paal leye poduvaipom..!!  :)  :P
 :) ethuvum puriya porathu illai ivarkalukku..!!!  :)  ;)



இன்பம் ................... காமம் .................
துன்பம் ........... பெரிது.





Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #333 on: October 06, 2016, 06:05:22 AM »
காமத்துப்பால் - கற்பியல் - படமெலிந்திரங்கல்

குறள் 1166 :
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


விளக்கம்  :
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.


.............  செல்வர் ............. .............
வறங்கூர்ந் ................. ...............

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #334 on: October 22, 2016, 04:59:10 PM »
குறள்:1010   
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

குறள் விளக்கம்
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

.............  ............ மாணடி சேர்ந்தார்
.........  ...... வார்
 

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #335 on: October 23, 2016, 07:31:02 AM »


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்

விளக்கம் :
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்


................. அந்தணன் .................. ..............
பிறவாழி நீந்தல் ............

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #336 on: October 23, 2016, 06:25:17 PM »
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

................   .............இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் ........... .....

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #337 on: November 01, 2016, 12:35:39 PM »
அழுக்கற்று   அகன்றாரும்   இல்லை   அஃதுஇல்லார்   
பெருக்கத்தில்   தீர்ந்தாரும்   இல்.



பொதுநலத்தார்   .....................   தோயார் .............   
மாண்ட   ...........      .........

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #338 on: November 03, 2016, 01:32:36 PM »
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
 மாண்ட அறிவி னவர்.

விளக்கம் :
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.


நிழல்நீரும் ..................... .................. தமர்நீரும்
இன்னாவாம் ...............  ..........

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #339 on: November 10, 2016, 04:19:30 PM »
நிழல்நீரும்   இன்னாத   இன்னா   தமர்நீரும்   
இன்னாவாம்   இன்னா   செயின்.



நல்லார்கண்   .............. ...................   இன்னாதே   
......................................   பட்ட   திரு.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #340 on: November 13, 2016, 06:37:35 AM »
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
 கல்லார்கண் பட்ட திரு

விளக்கம்  :
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.



உவப்பத் ............... உள்ளப் ..................
.................. ..................... தொழில்.
« Last Edit: November 13, 2016, 06:39:37 AM by ரித்திகா »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #341 on: December 30, 2016, 11:00:28 PM »
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


அதிகாரம் : 40 கல்வி     குறள் : 394

மகிழும் படியாகக் கூடிபழகி இனி இவரை எப்போது காண்போம் என்று
வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்


தனக்குவமை _________ தாள்சேர்ந்தார்க் ___________
மனக்கவலை ____________ அரிது
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #342 on: January 06, 2017, 07:08:15 AM »
குறள் : 7  பால் :அறத்துப்பால்  அதிகாரம் : கடவுள் வாழ்த்து

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது ...

பொருள் :
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.


.............. ஏனை எழுத்தென்ப ................
கண்ணென்ப ..................... .......................

Offline SanSa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #343 on: January 25, 2017, 12:26:47 PM »

குறள் 392 : எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..                                                                                                விளக்கம் 1:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

விளக்கம் 2:
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
                                                                                                                                               கேடில் ...................   .............. யொருவற்கு
..................... மற்றை யவை.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #344 on: January 26, 2017, 11:17:15 AM »
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

குறள் விளக்கம் :
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


....................... ........................ ........................ அதுவல்லது
ஊதியம் ....................... .................