Author Topic: ~ லேடீஸ் ஸ்பெஷல் - ஹெல்த்தி ரெசிப்பிகள்! ~  (Read 1481 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெல்லி மோர்



தேவையானவை:

நெல்லிக்காய் - 1, மோர் - ஒரு டம்ளர், புதினா இலை - 4, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மோருடன் புதினா, நறுக்கிய நெல்லிக்காய், இஞ்சித் துருவல், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இதை, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஐஸ் துண்டுகள், புதினா இலை சேர்த்து, அலங்கரித்துப் பருகவும். வெயிலுக்கேற்ற சத்தான மோர் தயார்.

பலன்கள்:

மோரில் புரதம் குறைவு.  கால்சியம் ஓரளவு இருக்கிறது.  வயிற்றைக் குளுமையாக்கும்.  நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி ஜீரண சக்தியைக் கொடுக்கும். தோலுக்கு நல்லது.  எலும்புகளை உறுதியாக்கும்.  சிறுநீர் நன்றாகப் பிரியும். உஷ்ணத்தால், பெண்களுக்குச் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது நிற்கும். சருமத்தைப் பொலிவாக்கும். எலும்புகள் வலுவடையும். குளிர்ச்சியைத் தரும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மஷ்ரூம் மசாலா



தேவையானவை:

காளான் - 200 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மல்லித் தூள் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, சோம்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், முந்திரி, கசகசா அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சிறிது நீர் விட்டு, கொதிக்கவிடவும். பிறகு, சுத்தம் செய்து நறுக்கிய காளானை உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். முந்திரி, கசகசா விழுது சேர்க்கவும். எல்லாம் நன்றாகச் சேர்ந்து வரும்போது, மிளகுத் தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, பரிமாறவும். சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என எல்லாவற்றுக்கும் ஏற்ற சைடு டிஷ் இது.

பலன்கள்:

நார்ச்சத்து, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. காளான் ரத்தத்தில் படிந்துள்ள அதிக கொழுப்பைக் கரைத்துச் சுத்தப்படுத்தும். மலட்டுத்தன்மை, கருப்பை நோய்கள், மார்பகப் புற்று நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள், காளானை அதிகம் பயன்படுத்தக்கூடாது. மற்றபடி, அனைவரும் சாப்பிடலாம். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கர்ப்பப்பையில் வரும் பிரச்னைகளை விரட்டும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கார்ன் புரோகோலி சூப்



தேவையானவை:

வேகவைத்து மசித்த ஸ்வீட் கார்ன், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - தலா 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - 1, இஞ்சித் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், புரோகோலி - 12 பூக்கள், மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பால், ஃபிரெஷ் கிரீம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, புரோகோலி, இஞ்சித் துருவல், மசித்த ஸ்வீட்கார்ன் விழுது சேர்த்து வதக்கவும். மூன்று டம்ளர் நீர் விட்டு, கொதிக்க விடவும். உப்பு சேர்த்து, புரோகோலி வெந்ததும், வேகவைத்த சோள முத்துக்கள், பால் சேர்த்துக் கலக்கி,ஓரு கொதி வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன்பு மிளகுத் தூள், விருப்பபட்டால் ஃபிரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

பலன்கள்:

நார்ச்சத்து, கால்சியம், புரதம், தாது உப்புக்கள், பி காம்ப்ளக்ஸ்  வைட்டமின்கள் உள்ளன.  புரோகோலியில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது.  வெண்ணெய் சேர்ப்பதால் உடலில் ஓரளவு கொழுப்புச் சேர்ந்து, பசியைத் தூண்டும். உடலில் சக்தி இல்லாமல் இருக்கும் பெண்கள், இந்த சூப்பை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம்.  இதய நோயாளிகள் வெண்ணெயைத் தவிர்க்கலாம். சோளத்தில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.  எளிதில் ஜீரணத்தைக் கொடுக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கேரட் பீட்ரூட் டிலைட்



தேவையானவை:

பீட்ரூட், கேரட் - தலா 1, தக்காளி - அரை, மிளகு, சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - சிறிதளவு, உப்பு - கால் டீஸ்பூன், ஒரு எலுமிச்சைச் சாறு.

செய்முறை:

பீட்ரூட், கேரட், புதினா, தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். இதனுடன், உப்பு, மிளகு, சீரகத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையைப் பொடியாக நறுக்கி, சேர்த்துக் கலக்கவும். ஐஸ் துண்டுகள் போட்டு, பருகவும்.

பலன்கள்:

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.  பார்வைத் திறனுக்கு நல்லது. பீட்ரூட்டில் மூளை நரம்புகளைத் தூண்டும் கோலின் சத்து இருப்பதால் கருவிலேயே மூளை வளர்ச்சி அதிகரிக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இளமையைத் தக்க வைக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மணத்தக்காளி கீரை மண்டி



தேவையானவை:

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு, பூண்டு பல் - 4, சின்ன வெங்காயம் - 6-7, காய்ந்த மிளகாய் - 4, அரிசி களைந்த நீர் - ஒரு கப், சீரகம், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 கீரையைச் சுத்தம் செய்து நறுக்கவும். பூண்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்துக் கிளறி, அரிசி களைந்த நீரை ஊற்றி, வேகவிடவும். உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்கவும். கீரை வெந்ததும், தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:

பி காம்ப்ளெக்ஸ் இதில் அதிகம் இருப்பதால், வயிற்றுப் புண், வாய்ப் புண்ணுக்கு நல்லது.  கால்சியம், இரும்புச்சத்து இதில் அதிகம். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். தேங்காய் பால் சேர்ப்பதால் கொழுப்பும் உடலில் சேரும். கருவுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியது மணத்தக்காளி. மாதவிடாயின்போது ஏற்படும் உஷ்ணத்தைக் குறைக்கும். வயிற்றைக் குளுமையாக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டிரை ஃப்ரூட்ஸ் ரெய்த்தா



தேவையானவை:

முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரீச்சம் பழத்துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், தயிர் - அரை கப், மிளகுத் தூள், மிளகாய்த் தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - சிட்டிகை.

செய்முறை:

 தயிரில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் வகைகளைப் பொடியாக நறுக்கவும். இதனுடன், தயிர் சேர்க்கவும். பேரீச்சம் பழத்துண்டுகளைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, மேலாக, மிளகாய்த் தூள் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்:

அக்ரூட்டில் ஒமேகா 3 இருப்பதால் இதயத்துக்கு நல்லது.  பெண்களுக்கு மூட்டு தொடர்பான பிரச்னைகள் வராமல் காக்கும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து கிடைப்பதால் உடலுக்கு நல்ல எனர்ஜியைத் தரக்கூடியது.