Author Topic: ~ வேப்பம்பூ ரெசிப்பிக்கள்! ~  (Read 1699 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


கோடைகாலத்தில் வேப்ப மரங்களில் வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கும். கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் வேப்பம்பூவை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வேம்பம்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிக்கள் இங்கே இடம் பிடித்துள்ளன.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேப்பம்பூ துவையல்



தேவையானவை:

வேப்பம் பூ - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளி - 2 சிறிய நெல்லிக்காய் அளவு
பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பூண்டுப்பல் - 2 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, கடுகு , உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பின், அதே வாணலியை அடுப்பில் வைத்து தீயைக் குறைத்துக் சிறிதளவு எண்ணெயில் வேப்பம் பூவை வறுத்து அடுப்பை அணைக்கவும். இனி வறுத்து வைத்திருப்பவைகளுடன் புளி, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். விருப்பப்பட்டால், பூண்டுப் பல்லையும் சிறிதளவு கடைசியாகச் சேர்த்து அரைத்து வைக்கவும். சாதம், டிபன் வகைகளுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இந்தத் துவையல்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேப்பம்பூ சாலட்



தேவையானவை:

வேகவைத்த வேர்க்கடலை - 100 கிராம்
பச்சைப்பயறு - 100 கிராம்
தக்காளி -1
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைப் பயறை குலையாமல் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வேப்பம்பூவைச் சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் வேக வைத்த வேர்க்கடலை, வேக வைத்த பச்சைப்பயறு, பொடியாக நறுக்கியவை, துருவிய இஞ்சி, உப்பு, வேப்பம்பூவையும் சேர்த்துக் கலந்துக்கொள்ளவும். இதன் மேல் எலுமிச்சைச்சாறு ஊற்றி தேவைப்பட்டால், ஒரு சிட்டிகை சாட் மசாலா அல்லது கரமசாலாத்தூளைத் தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேப்பம்பூ பொடி



தேவையானவை:

வேப்பம்பூ - 100 கிராம்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 10 முதல் 15 (காரத்துக்கு ஏற்ப கூட்டிக் குறைக்கவும்)
கடலைப்பருப்பு - 50 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உப்பு தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் வாணலியில் தனித்தனியாக எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் உப்பு சேர்த்து இட்லிப் பொடியைப் போல் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேப்பம்பூ ரசம்



தேவையானவை:

துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 200 மில்லி
புளி- நெல்லிக்காய் அளவு (ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும் )
தக்காளி- 2 (நைஸாக அரைத்துக்கொள்ளவும்)
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தூள் செய்ய :

மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க :

கடுகு - அரை டீஸ்பூன்
வேப்பம்பூ- 3 டேபிள்ஸ்பூன்
நெய்- ஒன்றரை டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் புளிக்கரைசலுடன், அரைத்த தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தூளாக்க செய்ய கொடுத்தவற்றை தூளாக்கிச் சேர்த்துக் கலக்கவும். இதை 2 முதல் 3 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கலவை லேசாக கொதிக்கும் போது துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றவும். ரசம் நுரைத்து வரும்போது, தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேப்பம்பூ  இனிப்புப் பணியாரம் அல்லது அப்பம்



தேவையானவை:

பனங்கற்கண்டு - 100 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
வேப்பம் பூ- ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு- 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு

செய்முறை:

வேப்பம்பூவை லேசாக வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். நன்றாகக் கொதிக்கும் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைந்ததும் அந்தத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் நன்றாகக் கொதிக்கவிடவும். பனங்கற்கண்டு கரைந்ததும் இறக்கி, ஆற வைக்கவும். அகலமான ஒரு பவுலில் மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள், பொடி செய்த வேப்பம்பூ, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொண்டு, வெதுவெதுப்பான நீரை இதில் சேர்த்து, இட்லி மாவைக் கரைக்கும் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசைக்கல்லிலும் அப்பமாக ஊற்றலாம் அல்லது குழிப்பணியாரமாகவும் செய்து சாப்பிடலாம்.