எப்படி மறக்க முடிந்தது
உன்னால் மட்டும்
மறக்க முடியாமல்
நினைவுகளை
சுமந்து
பார்க்கும் இடமெல்லாம்
உன் வாசம் வந்து போக
கண்ணீருடன் காலத்தை
தொலைத்து கொண்டிருக்கிறேன்
உதித்த நொடியில்
மறையுமோ???
பூத்த நொடியில் வாடுமோ....
எனக்கு மட்டும்
எல்லாமே நொடியில்
மறை(ற)ந்து விடுகின்றதே