Author Topic: ~ சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள் ~  (Read 1109 times)

Online MysteRy

வெள்ளைப் பணியாரம்



தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 25 கிராம்
உப்பு - சிறிது
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை:

பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீர் ஊற்றி 40 நிமிடம் ஊற வைத்து இறுத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும். இதில் உப்பு, சோடா உப்பு சேர்த்து தோசை மாவை விட லேசாக இருப்பது போல கரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இருக்கும் போது குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும். பணியாரக்கல்லில் ஊற்றி வேக வைத்து எடுப்பதை போல இது எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கும் பணியாரம்.

Online MysteRy

பிரெட் அல்வா



தேவையானவை:

ஸ்வீட் பிரெட் - அரை கிலோ
நெய் - 250 மில்லி
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
பிஸ்கெட் - 4
சர்க்கரை - 400 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
இனிப்பில்லாத பால்கோவா - 30 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:

சிறிது பாலில் கோவாவைக் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும். பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை எல்லாம் கத்தியால் நறுக்கி விடவும். பிரெட்டின் சதைப்பகுதியையும், பிஸ்கெட்டையும் காய்ச்சிய பாலில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அடுப்பில் கடாயை வைத்து ஊற வைத்த பிரெட் கலவையைச் சேர்த்து கிண்டவும். பதம் கெட்டிப்படுகிற நேரத்தில் சர்க்கரையைச் சேர்த்து மேலும் கிண்டவும். சர்க்கரை கரைந்து பதம் இறுகும் நேரத்தில் கரைத்த பால்கோவா கலவையை ஊற்றி நன்கு கிண்டவும். அல்வா பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி இறுதியாக முந்திரிப்பருப்பு, நெய் ஊற்றி கிளறி இறக்கிப் பரிமாறவும்.