Author Topic: ~ கொத்தமல்லிதழை பாதுகாக்க ~  (Read 407 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தமல்லிதழை பாதுகாக்க



சட்னி வைக்க,ரசம், சாம்பார் போன்றவற்றில் அலங்கரிக்க என்று எனக்கு எப்போதும் கொத்தமல்லிதழை கொஞ்சமாவது வீட்டில் இருக்க வேண்டும். ஆனால் வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாகவே என்னதான் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் கூட வாடிவிடும், இல்லாட்டி அழுகிவிடும். நானும் என்னென்னவோ செய்து பார்த்தாகிவிட்டது. ம்கூம்.. ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. frown emoticon கடைசிக்கு இந்தமுறைதான் எனக்கு கைகொடுத்திருக்கிறது.ஒரு பத்து நிமிடம் இதுக்குன்னு செலவழித்து செய்துவைத்துவிட்டால் 2 -3 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.. அந்த முறை…

மல்லித்தழையை மண் இல்லாமல் அலசி விடவும். தண்ணி இல்லாமல் வடித்து உலர்த்தவும்.ஒவ்வொரு செடியிலும் கீழ் தண்டுபகுதியிலுள்ள இலைகளை நீக்கி தனியாக எடுத்து வைக்கவும். (2- வது படத்தில் உள்ளபடி).கீழ் பகுதி இலைகள் நீக்கப்பட்ட செடிகளை இப்போது ஒன்றாகசேர்த்து ரப்பர்பேண்டு கொண்டு கட்டவும்.
ஒரு டப்பாவில் பாதியளவு தண்ணியை நிரப்பவும். மல்லித்தழையின் அடித்தண்டுப்பகுதி தண்ணியில் நனையுமாறு வைக்கவும்.
மல்லித்தழையின் மேல்பக்கதில்லுள்ள இலைகளை பாலிதீன் பைக்குள் இருக்கும்படி மூடவும். இதை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
தண்ணி கலங்கலாக நிறம்மாறும்போது, பழைய தண்ணியை கீழே ஊற்றிவிட்டு புதுத்தண்ணி வைக்கவும்.

அடிப்பகுதியில் இருந்து பிரித்த இலைகளையும் தனியாக ஒரு டப்பாவில் சேகரித்து வைத்திருந்து அதையும் சமையலுக்கு பயன்படுதிக்கொள்ள எதுவும் வீணாகாது.