Author Topic: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~  (Read 2449 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #15 on: March 16, 2015, 05:36:40 PM »
தயிர் சேமியா



தேவையானவை:
சேமியா - 200 கிராம் (வேகவிட்டு், நீரை வடிக்கவும்), தயிர் - ஒரு கப்,  சர்க்கரை - ஒரு சிட்டிகை, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க:
மிளகு - 10, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் (கிள்ளியது) - 2

செய்முறை:
தயிருடன் உப்பு, சர்க்கரையை சேர்த்துக் கடையவும். இதனுடன் வெந்த சேமியாவைச் சேர்க்கவும். வெண்ணெயை உருக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதனை சேமியா கலவையுடன் சேர்க்கவும். பிறகு, மாதுளை முத்துக்கள் பச்சை திராட்சை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #16 on: March 16, 2015, 05:38:03 PM »
நூடுல்ஸ் பான் கேக்



தேவையானவை:
தோசை மாவு - ஒரு கப்,  பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று (துருவவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 50 கிராம், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
நூடுல்ஸை வேகவிட்டு, வடிகட்டி, ஆறியபின் தோசைமாவில் சேர்க்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். சூடான தவாவில் ஒன்றரை கரண்டி மாவை கனமான `பேன் கேக்’ ஆக ஊற்றவும். எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு மேலே சிறிதளவு இட்லி மிளகாய்ப் பொடி தூவவும். தேங்காய் சட்னி, புதினா/கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #17 on: March 16, 2015, 05:39:19 PM »
கேபேஜ் துவட்டல்



தேவையானவை:
துருவிய கோஸ் (கேபேஜ்) - ஒரு கப், நறுக்கிய புதினா - அரை கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் நெய்யை சூடாக்கி, நறுக்கிய புதினா சேர்த்து, நன்கு வதங்கிய பின் துருவிய கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். அடிப்பிடிக்காமல் கவனமாக கிளறிவிட்டு செய்யவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #18 on: March 16, 2015, 05:41:24 PM »
மாவற்றல் ரசம்



தேவையானவை:
மாவற்றல் (காதி கிராஃப்ட் கடைகள், டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 10 துண்டுகள், பருப்பு நீர் - ஒரு கப் (50 கிராம் துவரம்பருப்பை வேகவைத்து, நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன், பொடித்த மிளகு, சீரகம் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
மாவற்றலை குக்கரில் வேகவிட்டு நன்கு மசிக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவற்றல் விழுது, பருப்பு நீர், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, கொதி வருகையில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி  இறக்கவும்.

குறிப்பு:
இந்த ரசத்துக்கு புளியும் தக்காளியும் தேவையில்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #19 on: March 16, 2015, 07:03:28 PM »
ரவா டோக்ளா



தேவையானவை:
ரவை - 200 கிராம், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் கடைகளிள் கிடைக்கும்) - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கடுகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (கீறவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
குக்கரில் ஒரு கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். ரவை, கடலை மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் - இஞ்சி் விழுது, ஃப்ரூட் சால்ட், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாகக் கரைக்கவும். இதை எண்ணெய் தடவிய கிண்ணத்தில் போட்டு குக்கரில் இருக்கும் கொதிநீரில் வைத்து மூடி, வெயிட் போடாமல் 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் வில்லைகள் போடவும். இதுதான் டோக்ளா.
கடுகு, பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து, டோக்ளாவின் மீது ஊற்றி... கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல், கேரட் துருவல் கொண்டு அலங்கரிக்கவும். எலுமிச்சைச் சாறை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #20 on: March 16, 2015, 07:04:53 PM »
பச்சை மிளகு ஊறுகாய்



தேவையானவை:
பச்சை மிளகு - 100 கிராம் (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை:
 பச்சை மிளகை காம்பு நீக்காது உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு ஊறவைத்தால், ஊறுகாய் ரெடி!
இது தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.  இதை ஃப்ரிட்ஜில் வைத்து சில நாட்கள் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #21 on: March 16, 2015, 07:06:51 PM »
சிவப்புப் பூசணி வெல்லப் பச்சடி



தேவையானவை:
சிவப்பு பூசணி - கால் கிலோ (நறுக்க வும்), வெல்லம் - 50 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3, பச்சை மிளகாய் - ஒன்று (பொடி யாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
சிவப்பு பூசணித்துண்டுகளை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு, புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்த பின் வெல்லம் சேர்த்து கெட்டியானதும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #22 on: March 16, 2015, 07:11:03 PM »
தயிர் நெல்லி



தேவையானவை:
முழு நெல்லி - 10 (வேகவிட்டு கொட்டை நீக்கவும்), கடைந்த தயிர் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்).

செய்முறை:
 தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வேகவிட்ட நெல்லிக்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆறவிட்டு, கடைந்த தயிரில் சேர்த்துப் பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 2, 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #23 on: March 16, 2015, 07:13:21 PM »
டொமேட்டோ - கார்லிக் தொக்கு



தேவையானவை:
நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள், துருவிய இளம் இஞ்சி - 50 கிராம், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 நல்லெண்ணெயை காயவிட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து... பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பாதி வதங்குகையில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #24 on: March 16, 2015, 07:14:40 PM »
பூரி கார ரோல்ஸ்



தேவையானவை:
பொரித்த பூரிகள் -  6, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு, தோல் நீக்கி, துருவவும்), கேரட் - ஒன்று (துருவவும்), லவங்கம் - 6, பனீர் துருவல், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
நெய்யில் கேரட் துருவலை வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு துருவல், மிளகுத்தூள், உப்பு, பனீர் துருவல் சேர்க்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்துவிடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #25 on: March 16, 2015, 07:15:57 PM »
ஜவ்வரிசி வெல்லப் பாயசம்



தேவையானவை:
ஜவ்வரிசி - 100 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப், வெல்லம் - 150 கிராம் (கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து, ஒரு கப் நீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் சேர்க்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் தூவிப் பரிமாறவும்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #26 on: March 16, 2015, 07:17:27 PM »
முளைகட்டிய  வெந்தயக் கறி



தேவையானவை:
முளைகட்டிய வெந்தயம் - 3 டீஸ்பூன், வேகவைத்த துவரம்பருப்பு - 50 கிராம், தேங்காய்த் துருவல், - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, சர்க்கரை  - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை:
முளைகட்டிய வெந்தயத்தை வேகவிட்டு எடுக்கவும் (குக்கரில் சாதம் வைக்கும்போது, மேல் தட்டில் வைத்து வேகவிடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, வேகவிட்ட வெந்தயம் சேர்த்து, உதிர் உதிராக வரும் வரை நன்கு புரட்டி எடுத்துப் பரிமாறவும். வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், சர்க்கரை இவை மூன்றும் சேர்ந்து வெந்தயத்தின் கசப்பை வெகுவாகக் குறைத்துவிடும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #27 on: March 16, 2015, 07:19:25 PM »
திடீர் போண்டா



தேவையானவை:
இட்லி / தோசை மாவு - ஒரு கப், ரெடிமேட் பஜ்ஜி - போண்டா மிக்ஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். இந்த மாவை, சூடான எண்ணெயில் போண்டாக்களாக போட்டுப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
மேற்கூறிய மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, நறுக்கிய காய்களைத் தோய்த்து பஜ்ஜியும் போடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #28 on: March 16, 2015, 07:20:37 PM »
கேழ்வரகு கீர்



தேவையானவை:
கேழ்வரகு மாவு - 5 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த பாசிப்பருப்பு மாவு - 3 டீஸ்பூன், பால் - 2 கப், சர்க்கரை - 150 கிராம், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சீவிய முந்திரி - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
நெய்யை சூடாக்கி கேழ்வரகு மாவை நன்கு சிவக்க வறுத்து பாசிப்பருப்பு மாவைச் சேர்க்கவும். பிறகு 150 மில்லி தண்ணீர், சர்க்கரை சேர்க்கவும். நன்கு கொதி வருகையில் இறக்கி, பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள், சீவிய முந்திரி சேர்த்துப் பரிமாறவும். பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் இதை செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28792
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #29 on: March 16, 2015, 07:22:18 PM »
ஈஸி பாஸந்தி



தேவையானவை:
 ஃபுல்கிரீம் மில்க் - ஒரு பாக்கெட் (500 மில்லி), சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு - அரை டீஸ்பூன், சீவிய முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்.

செய்முறை:
பாலை ஏடு படிய காய்ச்சவும். 10 நிமிடத்தில் நன்கு காய்ந்துவிடும். இதனுடன் சர்க்கரை சேர்த்து (இளகும்... கவலை வேண்டாம்), நன்கு கரைந்த பின், சோள மாவை சிறிதளவு நீரில் கரைத்து சேர்த்து, கெட்டியானதும் இறக்கவும். சீவிய முந்திரி, குங்குமப்பூ தூவி பரிமாறவும்.