Author Topic: 2015 மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்  (Read 5590 times)

Offline Maran


2015 ஆ‌ம் ஆ‌ண்டு மார்ச் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28



1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள்,  இந்த மாதத்தில் எங்குச் சென்றாலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும் அலைச்சல்,  செலவினங்கள் இருக்கும். பிள்ளைகளால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அவர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். உயர்கல்வி,  உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை இப்போது தவிர்ப்பது நல்லது. மாதத்தின் மையப் பகுதி முதல் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்,  நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும்.

மாதத்தின் பிற்பகுதியில் வாகன விபத்துகள்,  வீடு,  வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். டி.வி.,  ஃப்ரிட்ஜ்,  வாஷிங் மெஷின் பழுதாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். முதுகு,  மூட்டு வலி,  கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை முழுமையாக நம்புவார்கள். அலுவலகத்தை நவீன மயமாக்க திட்டமிடுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார். எதிர்நீச்சல் போட வேண்டிய மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்:1, 3, 5
அதிஷ்ட எண்கள்:3, 5
அதிஷ்ட நிறங்கள்:சில்வர்கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்:திங்கள், வியாழன்



Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29



2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் ஆதாயம் உண்டு. வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவ்வப்போது கை,  கால் வலி,  சோர்வு,  களைப்பு வரும். சிலருக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்,  கால்சியக் குறைவு வரக்கூடும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவர்களுடன் கருத்து மோதல்களும் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வீடு,  வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆனால் எதிர்ப்புகள்,  எதிர்மறை எண்ணம்,  தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும்.

மாதத்தின் மையப்பகுதி முதல் வீடு,  மனை,  சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவிவழி சொத்துகள் வந்து சேரும். நண்பர்,  உறவினர்களுடன் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. பழைய நண்பர்களுடன் பகைமை வரக்கூடும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்கள்,  பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு சில காரியங்களை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய அணுகுமுறையால் முன்னேறும் மாதமிது. 
           
அதிஷ்ட தேதிகள்:2, 6, 16
அதிஷ்ட எண்கள்:4, 9
அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை, மயில்நீலம்
அதிஷ்ட கிழமைகள்:புதன், சனி




Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30



3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பழுதான மின்னணு,  மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய இனிய சம்பவங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்வீர்கள். என்றாலும் சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள்.

காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள். மாதத்தின் மையப்பகுதி முதல் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல்,  டென்ஷன் இருக்கும். அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவுவார்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சவாலான காரியங்களை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். குடும்ப ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்:3, 21, 27
அதிஷ்ட எண்கள்:2, 8
அதிஷ்ட நிறங்கள்:ஊதா, க்ரீம்வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்:திங்கள், புதன்




Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31



4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள்.

ஆனால் யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று வருவது நல்லது. மாதத்தின் மையப்பகுதியிலிருந்து தொட்டதெல்லாம் துலங்கும். புது பொறுப்புகள் தேடி வரும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். பணவரவு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை,  ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர்,  நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகன வசதிப் பெருகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களும் நட்புறவாடுவார்கள்.

கலைத்துறையினர்களே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். வசதி,  வாய்ப்புகள் பெருகும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்:4, 6, 22
அதிஷ்ட எண்கள்:1, 5
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு, செவ்வாய்




Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23



5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகள்,  சிக்கல்கள்,  சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி பேசுபவர்கள்,  வேற்றுமாநிலத்தை சேர்ந்தவர்களாலும் நன்மை உண்டாகும். தைரியத்தையும்,  வலிமையையும் தருவார். ஆனால் உடல் நலக் குறைவு ஏற்படும். கார,  அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வீடு,  மனை வாங்குவது,  விற்பது லாபகரமாக அமையும்.

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீடு,  மனை வாங்குவீர்கள். வர வேண்டிய தொகைக் கைக்கு வரும். அழகு,  இளமைக் கூடும்.  அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு,  சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினர்களே! கௌரவிக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். வி.ஐ.பிகளால் இனம் கண்டறியப்படும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்:5, 6, 17
அதிஷ்ட எண்கள்:4, 8
அதிஷ்ட நிறங்கள்:கிரே, பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்:புதன், வெள்ளி



Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24



6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். முன்கோபம்,  வாக்குவாதங்கள்,  அலுப்பு,  சலிப்பு,  வெறுப்பு நீங்கும்.

அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். அரசால் ஆதாயம் உண்டு. ஆனால் கண்,  பல் வலி வரக்கூடும். சில காரியங்களை இரண்டு,  மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. மாதத்தின் மையப்பகுதி முதல் மனதிலே ஒரு தெளிவு,  முகமலர்ச்சி,  அழகு,  ஆற்றல்,  உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும்.

வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான டி.வி.,  ப்ரிட்ஜ்,  ஓவனை மாற்றுவீர்கள். பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். தொண்டை வலி,  தொண்டை புகைச்சலும் அவ்வப்போது வரக்கூடும். மூத்த சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆனால் இளைய சகோதர வகையில் செலவினங்கள் வந்துப் போகும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள்,  பங்குதாரர்களின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! வசதி,  வாய்ப்புகள் பெருகும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்:4, 6, 5
அதிஷ்ட எண்கள்:3, 9
அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்:வெள்ளி, சனி



Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25



7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கறாராகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வீடு,  மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கண் எரிச்சல்,  முன்கோபம்,  வாக்குவாதங்கள்,  செரிமானக் கோளாறு வந்துப் போகும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

வேலைச்சுமை,  கனவுத் தொல்லை இருக்கும். நீண்ட நாட்களாக பழகிய நண்பர்களுடன் கூட கருத்து மோதல்கள் வரக்கூடும். தொண்டை புகைச்சல் வரும். ஆனால் வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.

கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்துப் போகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சிக்கனமும்,  சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:7, 11, 15
அதிஷ்ட எண்கள்:3, 6
அதிஷ்ட நிறங்கள்:அடர் நீலம், வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்:திங்கள், புதன்



Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26



8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள்,  உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுக்கலாம்.

சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு,  மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சகோதரங்களின் மனசு மாறும். புது வாகனம் வாங்குவீர்கள். செலவினங்கள் கூடிக்கொண்டேப் போகும். சில நேரங்களில் எதிர்காலத்தை நினைத்து சின்ன சின்ன பயம் வரும்.

குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்கள் காணாமல் போகக்கூடும். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது ஆபரணங்களை பாதுக்காப்பான இடத்தில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. வெளிவட்டாரத்தில் புகழ்,  கௌரவம் ஒருபடி உயரும்.

அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள்.

கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சுபச் செலவுகளும்,  திடீர் பயணங்களும் அதிகரிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:8, 14, 15
அதிஷ்ட எண்கள்:4, 7
அதிஷ்ட நிறங்கள்:அடர்நீலம், இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வியாழன்



Offline Maran



மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27



9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எங்குச் சென்றாலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

வீட்டில் இருப்பவர்களும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரும். தந்தைவழி சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள்,  தடைகள் வந்துப் போகும். பழைய வாகனத்தை விற்று புதுசு வாங்குவீர்கள். ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள்.

திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ,  முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். மாதத்தில் மையப்பகுதியிலிருந்து வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களாலும் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். அவ்வப்போது பூர்வீக சொத்துப் பிரச்னைகள் விஸ்வரூபமெடுக்கும்.

எதுவாக இருந்தாலும் பேசி தீர்ப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். சகோதரங்களுடன் அவ்வப்போது மனவருத்தம் வந்துப் போகும். வீண் விவாதங்கள்,  விமர்சனங்கள் வரும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே! ஆடை,  ஆபரணம் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். சொந்த கடை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய பிரச்னைகள் தீரும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்:9, 1, 6
அதிஷ்ட எண்கள்:1, 5
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், ஆலிவ்பச்சை
அதிஷ்ட கிழமைகள்:செவ்வாய், சனி