தாங்க முடியாத வலியின்
நீட்சியாக இருக்கிறது
இப்போதெலாம் உன் புன்னகை
உன் பாதுகாக்கப்பட்ட உள்ளங்கைகளில்
ஏதோவொன்று நழுவி
விழுவதாக........................
உன் இறுக்கமான அணைப்பில் இருந்து
ஏதோவொன்று
விலகிவிட்டதாக....................
சில பீதிகளை சுமந்துகொண்டிருக்கிறது
என் மனம்
காரணம் நான் இல்லை
சொல்லி புரியவைக்க எனக்கு
தெரியவும் இல்லை
நீ உணர்ந்து தெளியும் வரை
மெளவ்னித்திருப்பேன்
மனத்தில் சில சிலுவைகளை
சுமந்த படி...........................