Author Topic: எங்கே அவள்  (Read 426 times)

Offline thamilan

எங்கே அவள்
« on: February 10, 2015, 06:16:41 PM »
வொட்கா விஸ்கி
ஜின் பட்டைசாராயம்
இதில் இல்லாத
போதை
அவள் பேச்சில்
இருந்தது

மலரில் வாசனைதிரவியங்களில்
பழங்களில் பான்பராக்கில்
இதில் இல்லாத
நறுமணம்
அவள் மேனியில்
இருந்தது

பனியில் ஏசியில்
குளிர்சாதன பெட்டியில் குளிர் காற்றில்
இதில் இல்லாத
குளுமை
அவள் தழுவலில்
இருந்தது

இவை அனைத்தும்
உள்ள அவள்
மட்டும்
என்னிடம் இல்லை