Author Topic: ~ 30 வகை பியூட்டி - ஹெல்த் ரெசிப்பி! ~  (Read 2294 times)

Offline MysteRy



'ஃபிஃப்டி கே.ஜி தாஜ்மகால்’ என்று வர்ணிக்கப்படுவதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேசமயம்... அழகாவதற்காக, எது எதையோ முயற்சி செய்து பார்த்துவிட்டு, கடைசியில் கண்ணாடியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொள்பவர்கள் பலர் உண்டு. மேலும் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? உடம்பில் பல பிரச்னைகள் இருந்தால், அதன் அவஸ்தை முகத்தைக் கடுகடுப்பாக ஆக்கத்தானே செய்யும்!



இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உணவுப்பழக்கம் மூலமாகவே உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் வகையில், பல்வேறு உணவுப் பொருட்களைப் பற்றி அலசி, ஆராய்ந்து, 30 வகை 'பியூட்டி  ஹெல்த் ரெசிப்பி’க்களை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், "கூடவே கொஞ்சம் உடற்பயிற்சியும் அவசியம்'' என்று வலியுறுத்துகிறார். இதையெல்லாம் டிரை பண்ணிப் பாருங்க... தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்க!

Offline MysteRy

பொட்டுக்கடலை பால்ஸ்



தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு  ஒரு கப், பொடித்த சர்க்கரை  முக்கால் கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், நெய்  தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மூன்றையும் நன்கு கலந்து... நெய்யை சூடாக்கி, மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்:

குழந்தைகளுக்கு போஷாக்கு தரும். மெனோபாஸ் நேரத்தில் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Offline MysteRy

அவல்  தேங்காய் கேசரி



தேவையானவை:

அவல்  ஒரு கப், தேங்காய்த் துருவல்  அரை கப், பொடித்த வெல்லம்  அரை கப், தண்ணீர்  அரை கப், நெய்  தேவையான அளவு, ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரி  சிறிதளவு.

செய்முறை:

பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு, கரைந்ததும் வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பிலேற்றி, ஒரு கொதி வந்ததும் அவல் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சிறிதளவு சேர்க்கவும். கலவை சற்று கெட்டியானதும் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி தூவி சாப்பிடவும்.

பலன்:

உடல் உறுதியாக இருக்க, சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

Offline MysteRy

சம்பா கோதுமை புலாவ்



தேவையானவை:

சம்பா கோதுமை ரவை -  2 கப், நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிய கேரட், குடமிளகாய், நறுக்கிய காலிஃப்ளவர், வேகவைத்த பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து)  ஒன்றரை கப், வெங்காயம்  ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு  தலா ஒன்று, பிரியாணி மசாலா  அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

ரவையுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, பொலபொலவென்று வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, உப்பு, பிரியாணி மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பொலபொலவென்று வெந்த ரவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

பலன்:

இது... கார்போஹைட்ரேட், விட்டமின் சத்து நிறைந்தது.

Offline MysteRy

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்



தேவையானவை:

பொன்னாங்கண்ணி கீரை  ஒரு கட்டு (ஆய்ந்து பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல்  கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து... கீரை, உப்பு சேர்த்து கொஞ்சமாக நீர் தெளித்துக் கிளறி மூடிவைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). வெந்ததும் தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பலன்:

மேனியை பொன் போல மினுமினுப்பாக ஆக்கும். கண் நரம்புகள் பலப்படும்.

Offline MysteRy

வாழைத்தண்டு சூப்



தேவையானவை:

வாழைத் தண்டு  சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும்), மோர்  ஒரு கப், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டு சாற்றுடன் மோர் மற்றும் உப்பு சேர்த்துப் பருகவும். 

பலன்:

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

Offline MysteRy

வீட் சூப்



தேவையானவை:

ஏடு இல் லாத பால் - 2 கப், கோதுமை மாவு  - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர்  ஒன்றரை கப், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் கோதுமை மாவை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். மாவுடன் நீரைச் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்கவிடவும். பிறகு, பாலை ஊற்றிக் கிளறி, கஞ்சிப்பதம் வந்தவுடன் இறக்கி, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி குடிக்கவும். 

பலன்:

உடலை இளைக்க வைக்கும். உளைச்சதை போடுவதை தடுக்கும்.

Offline MysteRy

மேத்தி சப்பாத்தி



தேவையானவை:

கோதுமை மாவு  - 2 கப், கடலை மாவு  ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு (இலைகளாக ஆய்ந்து, நீரில் அலசி சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், மாங்காய்தூள் (ஆம்சூர் பொடி)  ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய்  தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பலன்:

தலைமுடியை பளபளவென்றும், மிருதுவாகவும் ஆக்கும். பொடுகுத் தொல்லையைப் போக்கும்.

Offline MysteRy

வெள்ளரி  பூசணி ஜூஸ்



தேவையானவை:

 வெள்ளரிக்காய்  ஒன்று, பூசணிக்காய்  ஒரு சிறிய துண்டு, சுரைக்காய்  ஒரு சிறிய துண்டு, இஞ்சி  ஒரு சிறிய துண்டு, சர்க்கரை  கால் கப், மிளகு  சீரகப் பொடி  ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எலுமிச்சம்பழம் - 3.

செய்முறை:

வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் மூன்றையும் தோல் சீவி அரைத்து வடிகட்டி சாறெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி, தனியே அரைத்து, வடிகட்டி சாறெடுக்கவும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறெடுக்கவும். அனைத்து சாறுகளையும் ஒன்றாக சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவையான நீர் விட்டுக் கலந்து அருந்தவும்.

பலன்:

கண்களின் கீழ்வரும் கருவளையத்தைப் போக்கும். ஊளைச்சதையைக் குறைக்கும்.

Offline MysteRy

டேட்ஸ் கேக்



தேவையானவை:

 மைதா  இரண்டரை கப், வெண்ணெய் ஒன்றே கால் கப், பால்   ஒன்றரை கப், கண்டன்ஸ்டு மில்க்-  400 மில்லி, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம்  அரை கப், ஆப்ப சோடா  அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர்  ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்து, மீதமுள்ள மைதாவுடன் ஆப்ப சோடா, பேக்கிங் பவுடரை சேர்த்து சலிக்கவும் சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். பேரீச்சம்பழத்துடன் 2 டீஸ்பூன் மைதா சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
குழைத்த சர்க்கரை  வெண்ணெய் கலவையில் கண்டன்ஸ்டு மில்க், பால், மைதா, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் பேரீச்சம்பழக் கலவை சேர்த்து கலக்கவும். இதை... வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு டிரேயில் ஊற்றி, 'அவன்’ல் 180 டிகிரி சென்டிகிரேடில் 'பேக்’ செய்யவும்.
இதை வாணலியிலும் செய்யலாம். வாணலியில் மணல் போட்டு சூடு படுத்தி அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து அரை மணி நேரம் மூடி வைத்து 'பேக்’ செய்யவும்.

பலன்:

இரும்புச் சத்து அதிகரிக்கும்.

Offline MysteRy

மாதுளை தயிர் பச்சடி



தேவையானவை:

 புளிக்காத கெட்டித் தயிர்  ஒரு கப், மாதுளை முத்துக்கள்  ஒரு கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி  ஒரு டேபிள்ஸ்பூன், வாழைத்தண்டு  சிறிய துண்டு (பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்), கடுகு  அரை டீஸ்பூன்,  தேங்காய்த் துருவல்  கால் கப், பச்சை மிளகாய்  -2, முந்திரி  -6, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

பச்சை மிளகாய், முந்திரியை விழுதாக அரைத்து, கெட்டியான தயிரில் சேர்க்கவும். கடுகு, எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையையும் இதனுடன் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

பலன்:

இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

Offline MysteRy

வேப்பம்பூ பொடி



தேவையானவை:

 வேப்பம்பூ, உளுந்து  தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 10, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு  தலா கால் கப், பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன், சீரகம்  ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் உப்பைத் தவிர மற்ற அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடிக்கவும்.

பலன்:

வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.

Offline MysteRy

கேரட்  தேங்காய்ப்பால் கீர்



தேவையானவை:

கேரட் - 2, தேங்காய்ப்பால்  அரை கப், பால்  ஒரு கப், சர்க்கரை  கால் கப், ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன், முந்திரி - 6 (பொடியாக நறுக்கவும்).

செய்முறை:

கேரட்டை துருவி, மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து வைக்கவும். பால், தேங்காய்ப்பாலை ஒன்றாகக் கலந்து, சுண்டக் காய்ச்சி... சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். இதனுடன் கேரட் சாற்றை சேர்த்துப் பரிமாறவும்.

பலன்:

 உடலுக்கு சிவப்பழகைத் தரும். கண்கள் பளீரிடும்.

Offline MysteRy

கொத்தமல்லி சட்னி



தேவையானவை:

கொத்தமல்லித்தழை (மீடியம் சைஸ் கட்டு)  ஒன்று, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி  ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய்  - 2, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, வெல்லம்  அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து  தலா கால் டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லித்தழையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து... தோல் சீவிய இஞ்சி, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறவிடவும். இதனுடன் கொத்தமல்லித் தழை, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் (சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்).

பலன்:

உடல் குளிர்ச்சி பெறும். கண் பார்வை பலப்படும்.

Offline MysteRy

சோம்பு டீ



தேவையானவை:

ஏதாவது ஒரு பிராண்ட் டீத்தூள் - 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 டீஸ்பூன், சர்க்கரை  தேவையான அளவு.

செய்முறை:

பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒரு கப் நீரை அடுப்பில் வைத்து டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வறுத்த பெருஞ்சீரகம், சர்க்கரை சேர்த்து, அதுவும் சேர்த்து நன்கு கொதித்த பிறகு இறக்கி, வடிகட்டி அருந்தவும்.

பலன்:

 கை, கால்களில் தளர்வாக காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கும்.