பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில தீர்வு
பல்வலி பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தான் பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
கிராம்பு அழற்சி எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்களை கொண்டுள்ள இந்த மசாலா, பல்வலியுடன் போராடும் சிறந்த இயற்கையான நிவாரணியாகும்.
அதற்கு முழு கிராம்பு ஒன்றை பாதிக்கப்பட்ட பற்களின் இடையில் வைத்து சிறிது நேரத்திற்கு வாயை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். இதனால் கிராம்பில் உள்ள ரசாயனம் வெளியேறி, வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
லவங்கப்பட்டை ஈறுகளுக்கும், பற்களுக்கும் இந்த மசாலா மிகுந்த நன்மையை அளிக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி செயல்பாடு. உடனடி நிவாரணத்தைப் பெற, சிறிய அளவிலான லவங்கப்பட்டையை வாயில் போட்டு மென்று, மெதுவாக அதன் சாறை விழுங்கவும்.
சுவாச துர்நாற்றம் பல பேர்களுக்கு, ஒருவருடனான உறவில், சுவாச துர்நாற்றம் பெரிய தடையாக விளங்குகிறது. இருப்பினும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாக்கள் இதற்கு தீர்வை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏலக்காய் திடமான வாசனையுடன் கூடிய ஏலக்காயில் இனிமையான வாசனையும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளதால், சுவாச துர்நாற்றத்திற்கு இது சிறந்த நிவாரணியாக விளங்கும்.
இதனை உங்கள் உணவிற்கு பிறகு அப்படியே மெல்லவும் செய்யலாம் அல்லது டீயில் கலந்து தினமும் காலையில் குடித்தால் உங்கள் பிரச்சனை நீங்கும்.
கிராம்பு யூகெனோல் என்ற பாக்டீரியா எதிர்ப்பி பொருள் கிராம்பில் உள்ளதால், சுவாச துர்நாற்றத்தை எதிர்த்து இது போராடும். அந்த காரணத்தினால் தான், சுவாச துர்நாற்றம் உடையவர்கள் கிராம்பை வாயில் போட்டு மெல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருஞ்சீரகம் பொதுவாக உணவருந்திய பிறகு பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம், வாய் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது எச்சில் ஊறுவதற்கு மட்டும் பயன்படாமல், வாயிலுள்ள பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு, வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவும்.
வெண்மையான பற்கள் முத்துப் போன்ற வெண்மையான பற்களை வைத்திருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது? வெண்மையான பற்களுக்கு வாய் சுகாதாரமும் பராமரிப்பும் மிகவும் முக்கியமாகும். இதனை அடைய சில மசாலாக்களும் உதவுகிறது.
ஈறு பிரச்சனைகள் ஈறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதனால் அழற்சி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வகையான அனைத்து ஈறு நோய்களையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்திய மசாலாக்களை கொண்டே குணப்படுத்தலாம்.
வாய் அல்சர்கள் வாய் அல்சர் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பெரியளவில் இருக்கும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
காரசாரமான மற்றும் துவர்ப்பான உணவுகளை தவிர்ப்பதால் மட்டும் இதனை தடுத்து விட முடியாது. இதற்கு நிவாரணம் அளிக்கும் மசாலா உங்கள் சமயலறையிலேயே உள்ளது.
மஞ்சள் மஞ்சள் என்பது மிகச்சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பியாக செயல்படுகிறது. வாய் அல்சரை எதிர்த்து போராடி, அது மீண்டும் வராமல் இருக்க உதவுவது இந்த குணங்களே. ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை வாயில் தடவினால், அல்சருக்கு நிவாரணம் கிடைக்கும்.