Author Topic: ~ முதுகு வலியை போக்கும் நீச்சல் பயிற்சி ~  (Read 436 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226864
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முதுகு வலியை போக்கும் நீச்சல் பயிற்சி

நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும்.

ஆனால் பிற உடற்பயிற்சிகளைச் சரியான முறையில் செய்யவில்லை என்றால் உள்காயங்கள் ஏற்படும். ஆனால் நீச்சலில் இந்த வகை காயங்கள் குறைவே. மேலும் நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று.

• நீச்சல் சிறந்த மூச்சுப்பயிற்சி. இதன் மூலம் நுரையீரல் வலுப்பெறுவதால் ஆஸ்துமா வராது.

• நீச்சல் அடித்தால் ரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலம் பெறும்.

• உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். உடல் தசைகள் வலிமையாகும். இதனால் அழகும் கூடும்.

• கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகு தண்டுவடம் வலிமை பெற்று முதுகு வலி ஏற்படாது. தோள் வலி, கழுத்து வலியும் நீங்கும்.

• நீச்சல் இடிப்பதால் பெண்களுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் வராது.

• நீச்சல் அடித்து குளிக்கும் பெண்களுக்கு பிரசவகால நெருக்கடிகள் ஏற்படாது. சுகப்பிரசவம் நடக்கும்.

• மனஅழுத்தத்தை போக்கும் மகத்துவம் நீச்சலில் உள்ளது.

கவனிக்க வேண்டியவை:

* நீச்சல் நல்ல பயிற்சி தான். ஆனால் நீரில் மூழ்கும் அபாயத்தை நாம் மறக்கக் கூடாது. எனவே எப்போதும் நிறைய பேர் இருப்பது போல பார்த்துக் கொள்ளவும்.

* நீச்சல் குளத்தில் காப்பாளர் இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் நீச்சல் குளத்தைத் தெரிந்தெடுப்பது நல்லது.

* நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும்.