Author Topic: ~ இரவு தூக்கத்தை தொலைத்தால் ஆரோக்யம் சிதையும்! ~  (Read 337 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226864
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரவு தூக்கத்தை தொலைத்தால் ஆரோக்யம் சிதையும்!

சூப்பரான சம்பளம், ஐ.டி.யில் வேலைபார்க்கும் மக்களை நினைக்கும் போது அவர்கள் வாங்கும் சூப்பர் சம்பளம் மட்டும் தான் நினைவுக்கு வரும். 8 மணிநேரம் என்பதுபோய் 10, 12 மணிநேரம் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாயா, பேயா வேலை செய்கிறீர்களே எப்பசார் தூங்குவீங்க?

தூங்குவதற்கு எங்கே நேரம்?

3 ஷிப்ட் மாறி மாறி போயாக வேண்டும். இரவு நேரஷிப்ட் முடிந்து காலை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கலாமா இல்ல, கொஞ்சம் தூங்கிவிட்டு அப்புறம் சாப்பிடலாமா என்று தூக்கத்தை செட் பண்ணுவதற்குள் அந்த வீக்கே முடிந்துவிடுகிறது. சரியாகவே தூங்க முடியவில்லை. கண்ணெல்லாம் தீயாட்டம் எரியுது என்பார்கள் ஐ.டி. மக்கள்.

அடுத்த வாரம் ஈவினிங்ஷிப்ட். மாலை போய் இரவு லேட்னைட் வந்து சாப்பிடவும் முடியல, சாப்பிடாம படுத்தா தூக்கமும் வரலே.. அப்படி இப்படி புரண்டு படுத்து காலை 5 மணிக்குதான் தூக்கம் வந்துச்சு.

எழுந்திரிக்கும் போது மதியம் 12 மணியாயிடுச்சு. கொளுத்தும் வெயில் வெளியே அடிக்குது. ஆனா நான் தூங்கி எழும் போது மனதுக்குள் காலை நேர உணர்வு தான் இருக்கு.

அதனால் என்னால ஃப்ரீயா இருக்க முடியல. இந்த கால இடைவெளி மனச்சோர்வையும், எதிலும் ஆர்வமில்லாமல் மனசு இறுக்கமா இருக்கு என்பார்கள்.

இப்படி தூக்கம் செட் ஆவதற்குள் அடுத்தவாரம் பகல் ஷிப்ட் வந்துவிடும். அது செட் ஆவதற்குள் அடுத்தவாரம் மீண்டும் நைட் ஷிப்ட் வந்துவிடும்.

இப்படியாக ஐ-.டி. மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு கூடவே ஆரோக்யத்தையும் இளமையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.