Author Topic: ~ எளிதில் மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் ~  (Read 426 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226882
  • Total likes: 29029
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிதில் மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத நோய்கள்

மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பல நோய்கள் உள்ளன. சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் விரைவில் குணமாகும் வாய்ப்பு உள்ளது. முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம்.

நாசியழற்சி (Vasomotor Rhinitis) :

நாசியழற்சியின் அறிகுறிகளை பார்க்கும் போது, சாதாரண அழற்சியின் அறிகுறிகளை போலத் தான் இருக்கும். இதனை அறியாமல் மருத்துவர் அதற்குண்டான வைத்தியத்தை பார்க்காமல், வேறு சிகிச்சையை அளித்து வந்தால் நிலைமை மோசமடையும். மேலும், பிரச்சனைக்கான அறிகுறிகளை மருத்துவரிடம் மறைப்பதாலும், இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு. வாசனை திரவியம், சில உணவுகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு நாசி அடைப்பு, கண்ணில் நீர் வழிதல், தொடர்ச்சியாக மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் முதல் வேலையாக முறையான அலர்ஜி சோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

உடற்குழி நோய் (Celiac Disease):

உடற்குழி நோய் என்ற உடல் நல கோளாறு, செரிமான பிரச்சனைகளால் ஏற்படும். சிலருக்கு, க்ளுடென் (Gluten) உட்கொள்வதால் இப்பிரச்சனை அதிகரிக்கும். இந்த நோயால்அவஸ்திப்படுபவர்களுக்கு, அவர்கள் உண்ணும் உணவுகளின் ஊட்டச்சத்து, உடலில் போய் சேர்வதில்லை. அதற்கு காரணம், அவர்களின் சிறுகுடல் பாதிப்படைந்திருப்பதே ஆகும்.

வயிற்றுப் போக்கு, அடிக்கடி ஏப்பம், வயிறு வீங்குதல், மலச்சிக்கல் போன்றவைகளே இதற்கான அறிகுறிகள். ஆகவே இத்தகைய அறிகுறிகளை மருத்துவரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், அவர்களால் கண்டறிவது கஷ்டமாகிவிடும்.

தைராய்டு ஒழுங்கின்மை (Thyroid Disorders):

தைராய்டு ஒழுங்கின்மையால் அவஸ்திப்படுபவர்கள், முதலில் சந்திக்கும் பிரச்சனை நெஞ்சு வலியும், நெஞ்சு படபடப்பும். மேலும், ஆக்கச்சிதைவு ஒழுங்கின்மை, மூட்டு வலி மற்றும் வளர்ச்சி பிரச்சனைகள் போன்ற பிற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மருத்துவரும் சரி நோயாளிகளும் சரி, தைராய்டு பிரச்சனையை மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய் (Cancer):

புற்றுநோய் அறிகுறிகளை சளிக்கான அறிகுறிகள் என்று, பெரிய தவறை மருத்துவர்கள் செய்ய வாய்ப்புள்ளது. கொடிய அணுக்களின், கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியினால் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள், ஒவ்வொரு நோயாளிகளை பொறுத்து மாறுபடும்.

பசியின்மை, அதிகப்படியான வியர்வை, கடும் காய்ச்சல் போன்றவை அறிகுறிகளை புற்றுநோய் ஏற்படுத்தும். புற்றுநோயால் அவதிப்படுபவர், அதனை கவனிக்காமல் விடும் போது, அதிக அளவில் எடை குறைவும் ஏற்படும்.

நெஞ்சு வலி (Heart Attacks):

ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது மரணம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் ஆபத்து வருவது அனைவரும் அறிந்ததே. தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக் கொள்வதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் சோர்வு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவைகள் ஏற்படும். இவை அனைத்தும் இதற்கான அறிகுறிகள் ஆகும். இதை பொதுவாக மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.

பாக்டீரியா மூளை உறையழற்சி (Bacterial Meningitis):

இந்த பிரச்சனை ஏற்படும் போது, முதுகு தண்டு வீங்கும். மேலும், மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிப்படையும். சொறி, காய்ச்சல், இறுகிய கழுத்து போன்றவை இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள், சளிக்கானது என்று தவறாக நினைக்க வைக்கும். இது மரணத்தை கூட ஏற்படுத்தும். ஆகவே, மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை தவறாக புரிந்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, உங்களுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் மருத்துவரிடம் மறைக்காமல் தெரிவிக்கவேண்டும்