மானிட வாழ்க்கை நாடக மேடை என்றார் சேக்ஷ்பியர்,
ஆனால் நீங்கள் பலாப்பழம் என்கிறீர்கள் உண்மையில் அதுவும் சரிதான் ...
அந்த பலாப்பழத்தில்... இதுவும் அடங்கி இருக்கிறது
மூடிய மனது
பொறாமை
சாக்கு போக்குகள்
அலுவலக அரசியல்
வம்பு பேசுவது
பிரச்சினைகளை பெரிதாக்குவது
மாற்றத்தை எதிர்ப்பது
குழம்பி இருப்பது
அறியாமை
சகாக்களின் கட்டாயத்திற்கு இணங்குவது.
நேற்று, இன்று, நாளை
நம்முடைய மானிட வாழ்க்கை பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற எதிர்மறைகளால் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட எதிர்மறைகள் நல்லது x கெட்டது, உண்மை x பொய்மை, வெற்றி x தோல்வி, வளமை x வறுமை, சுதந்திரம் x கட்டுப்பாடு, இன்பம் x துன்பம், வாய்ப்புகள் x பிரச்சினைகள் என்ற பல தரப்பட்டவைகளாக உள்ளன.
இப்படி எதிர்மறைகளாகத் தெரிபவைகளில் நமக்குப் பிடித்தமான நல்லது, உண்மை, வெற்றி, வளமை, சுதந்திரம், வாய்ப்புகள், இன்பம் போன்றவற்றை நாம் ஏற்றுக் கொண்டு பொய்மை, தோல்வி, வறுமை, பிரச்சினைகள், துன்பம் ஆகியவற்றை வேண்டாமென்று ஒதுக்கிவிடுகிறோம்.
உலகமானிடம் தழுவிய ஆளுமை மானிட வாழ்க்கை நியதிகளுக்கேற்ப தனது சிந்தனையை மாற்றிக்கொண்டே இருக்கும்