Author Topic: ~ நீங்க யூஸ் பண்ற எண்ணெய் உடலுக்கு நல்லதா? ~  (Read 397 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227479
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீங்க யூஸ் பண்ற எண்ணெய் உடலுக்கு நல்லதா?

சமையலில் பயன்படுத்தும் எண்ணெய் விடயத்தில் பொதுவாக யாரும் கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக அனைவரும் விலை அல்லது விளம்பரத்தில் கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யை தெரிவு செய்கிறார்கள். ஆனால் அதேசமயம் அந்த எண்ணெய் உடலுக்கு நல்லதா என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.

சூரிய காந்தி எண்ணெய் யூஸ் பண்றீங்களா?

தற்போது சூரிய காந்தி எண்ணெய் பயன்பாட்டில் அதிகரித்துள்ளது. இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும்.

இது தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது.

சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன், லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம்.

எண்ணெய் சுழற்சி

பொதுவாகவே, எந்தவொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.

கொஞ்சமா யூஸ் பண்ணுங்க

அரிசி உமி எண்ணெயில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும் விலை அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் அதை வாங்கிப் பயன்படுத்துவது இயலாதது. எந்த எண்ணையாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நலம்.

கலந்து யூஸ் பண்ணுங்க

பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது.