Author Topic: ~ ஃபிஷ் வெஜிடபிள் தொக்கு ~  (Read 472 times)

Offline MysteRy

ஃபிஷ்  வெஜிடபிள் தொக்கு



தேவையானவை:
கடல் இறால்  கால் கிலோ,  மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள்  தலா ஒரு டீஸ்பூன், மிளகு  அரை டீஸ்பூன், சீரகம்  ஒரு டீஸ்பூன், தக்காளி  4,  இஞ்சி  பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம்  100 கிராம், உப்பு  தேவையான அளவு, ரீஃபைண்டு ஆயில்  200 மில்லி.

செய்முறை:
கடல் இறாலை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு ஆச்சி மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவைத்து  நீரில் நன்கு கழுவிவிடவும். சின்ன வெங்காயம், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிளகு, சீரகத்தைப் பொடித்துக்கொள்ளவும்.

வாணலியில் பாதியளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
அவை சிவக்க வதங்கியதும் சீரகத்தூள் மிளகுத்தூள்,  இஞ்சி  பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் சுத்தம் செய்த இறாலைப் போட்டு... தேவையான அளவு உப்பு, சிறிதளவு  மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன்  மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வேகும் வரை கிளறிவிடவும்.
அடுப்பை 'சிம்’மில் வைத்து மீதி எண்ணெயை சிறிது சிறிதாக சேர்க்கவும். இறால் நன்றாக வெந்ததும் நல்ல வாசனை வரும். உடனே இறக்கிவிடவும்.
இந்த தொக்கை சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடலாம். இறால் கால்சியம் சத்து நிறைந்தது.