என் சுவாசக் காற்றாக நீ
அதனால் தான்
உன்னை காணாமல்
அடிக்கடி மூச்சித்திணறல்
கோயிலை சுற்றுபவன்
பக்தனாம்
என் காதல் தேவதையை
சுற்றும் நான்
பித்தனாம்
உன்னைக் கண்டு
ஒவ்வொருவரும்
வெளிவிடும் வெப்ப மூச்சால்
புவி வெப்பம் அடைவது புரியாமல்
விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
ஓசானில் ஓட்டையாம்
தனியான எனக்கு
எந்த சிரமமும் இல்லாமல்
துணையாக வரும்
உன் நினைவுகள்
நான் வீட்டை அடைத்தாலும்
திரும்பிப் போகாமல்
வீட்டுக்குள்ளும் நுழைகிறது
அழையா விருந்தாளியாக