Author Topic: ~ சுவையான சாம்பார் எளிதாக தயாரிக்கும் முறை:- ~  (Read 430 times)

Online MysteRy

சுவையான சாம்பார் எளிதாக தயாரிக்கும் முறை:-



தேவையானவை:-

துவரம் பருப்பு - 1 /2 கப்
சாம்பார் வெங்காயம் – 1 /4 கப்
தக்காளி – 1
பூண்டு – 3 பல்
முருங்கைகாய் - 2
மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் – 1 /2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:-
-------------

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
புளிச்சாறு - கப்
கொத்தமல்லி - சிறிது
கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

குக்கரில் சிறிது நெய் விட்டு, துவரம் பருப்பை லேசாக நெய்யில் பிரட்டி பிறகு 2 – 3 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில்கள் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில், சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை,
வரமிளகாய், சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்.

இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு, மஞ்சள், மசாலா பொடிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து , தண்ணீரையும், புளிச்சாரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் சிறிது நெய்யையும், கொத்தமல்லியையும் சேர்த்து இறக்கவும்...