உங்கள் குழந்தைப் பருவத்தில், பள்ளியில் நடந்ததை நினைத்துப் பாருங்கள். சூரியனுக்கு வண்ணம் தீட்டச் சொல்லும் போது எந்த நிறத்தைப் பயன்படுத்தினீர்கள். அனைவரும் மஞ்சள் நிறத்தினைத் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது முற்றிலும் தவறு. சூரியனின் உண்மையான நிறம் “வெள்ளை” மட்டுமே. நாம் இருக்கும் பூமியிலுள்ள வளிமண்டலத்தினால் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. நாம் பார்க்கும் இடங்கள் மற்றும் வளிமண்டலத்தினைப் பொறுத்து நட்சத்திரங்கள் வெவ்வேறு நிறங்களில் தெரியும். ஆனால் அவற்றின் உண்மையான நிறம் வேறுமாதிரி இருக்கும்.
ஓரளவு குளிர்ச்சியாக மற்றும் 3500 கெல்வின் வெப்பநிலையில் உள்ள நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். 10,000 கெல்வினுக்கு மேல் வெப்பநிலையில் உள்ள நட்சத்திரங்கள் நீல நிறத்தில் இருக்கும். நமது சூரியன் சுமார் 6000 டிகிரி கெல்வினில் உள்ளது, இதன் அர்த்தம் அது கண்டிப்பாக வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும் என்பதுதான்.