பெண்களே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நடப்பதால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 14% குறைகின்றது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்! புற்றுநோய் தொடர்பான பிரச்சனைகள் நம்மைத் தினமும் துறத்திக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில், இந்த செய்தி மிகவும் நல்ல விடயம் தான்! 2013ம் ஆண்டு முடிவில் அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தினரால் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில், இந்த வியப்பூட்டும் விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் பலமான உடற்பயிற்சிகளைச் செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து, உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் குறைவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் போது சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினால் மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தைப் குறைக்க முடியும் என்றார்கள். ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி, புற்றுநோய் வருவதன் வாய்ப்பைக் குறைப்பதற்கு நடந்து செல்லுதல் போன்ற இலகுவான உடற்பயிற்சியே போதும் என்று சொல்லப் படுகின்றது. எனவே பெண்களே, நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யுங்கள்! மேலும் கண்டிப்பாக இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிர்ந்து அவர்களையும் உடற்பயிற்சி செய்யும்படி ஊக்குவித்து விடுங்கள்!