Author Topic: பளிச்சென்ற பற்களுக்கு “வாழைப்பழம்”  (Read 518 times)

Offline thamilan

அனைவருக்குமே தங்கள் பற்கள் வெண்மையாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் ஆசை.
இதற்கு எந்தவித ரசாயன பேஸ்டுகளோ தேவையில்லை, வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிக எளிமையான முறையில் பளிச்சென்ற பற்களை பெறலாம்.

வாழைப்பழத்தில் மிக அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் வாழைப்பழத்தின் தோல் வெள்ளை நிற பற்களை பெற உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாது.

தினமும் இரண்டு முறை வாழைப்பழத்தின் தோலை எடுத்து ஒரு நிமிடம் பற்களை தேய்க்க வேண்டும். இதனால் வாழைப்பழத்தில் உள்ள கனிமங்களான பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவைகள் பற்களால் உறிஞ்சப்படுகிறது. இவற்றை வீட்டிலேயே சிறந்த முறையில் செய்து முத்து போன்ற வெண்மையான பற்களை பெறலாம்.

இதேபோன்று ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள், இந்த பொடியால் தினமும் பற்களை தேய்த்து வந்தால் தூய்மையான, வெண்மையான பற்களை பெறலாம்.